தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது.. மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னை: சென்னை தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதல் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளதால் காலை 8.50 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கி உள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் விரைவாக பயணிக்க மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்று இரவு திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதாவது சென்னை தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சுரங்கபாதையில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதனால் நேற்று இரவு 10 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த பிரச்சனை இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. இதனால் ஒரு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இன்று காலையிலும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையம் முதல் விம்கோ நகர் டெப்போ வரையிலான மெட்ரோ ரயில் சேவை 18 நிமிடத்துக்கு ஒருமுறை இயங்குகிறது. விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை, டோல்கேட் முதல் விம்கோ நகர் டெப்போ இடையே மெட்ரோ ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் சென்ட்ரல் - ஏர்போர்ட் வழித்தடத்தில்7 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதனால் மெட்ரோ ரயிலில் இன்று காலையில் வேலை, கல்லூரிக்கு செல்லும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிப்பது நல்லது. இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. அதோடு பிரச்சனையை விரைவில் சரிசெய்வதாக தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் தொழில்நுட்ப கோளாறு இன்று காலை 8.50 மணிக்கு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து சென்னை விம்கோ நகர் டெப்போ - விமான நிலையம் இடையே வழக்கம்போல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛பராமரிப்பு பணி சரிசெய்யப்பட்டுள்ளது. விம்கோ நகர் டெப்போ மற்றும் விமான நிலையம் (நீலநிற வழித்தடம்) இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 8.50 மணி முதல் வழக்கம்போல் இயங்க தொடங்கி உள்ளது. சிரமத்துக்கு மன்னிக்கவும்'' என்று கூறியுள்ளது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications