உள்ளூர்காரர்களை நம்பாத ஸ்ரீகாந்த்! கதவில் கரண்ட் வைத்த கிருஷ்ணா! மயிலாப்பூர் கொலையின் பரபர பின்னணி.!
சென்னை : சென்னை மயிலாப்பூர் இரட்டை கொலை சம்பவத்தில், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டின் கதவில் கொலையாளிகள் மின்சார இணைப்பு கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் தொழிலதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகளாக ஸ்ரீகாந்தின் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த நேபாளத்தைச் கிருஷ்ணாவே, 3 மாதங்களாக திட்டமிட்டு இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

தொழிலதிபர் ஸ்ரீகாந்த்
உள்ளூர் ஆட்களை நம்பாத ஸ்ரீகாந்த், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். அந்தவகையில் கிருஷ்ணாவின் தந்தை லால்சர்மா, இறந்த தொழிலதிபர் ஸ்ரீகாந்திடம் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். குடும்பத்தினருடன் ஸ்ரீகாந்தின் வீட்டிலேயே ஒரு அறையில் தங்கி வந்துள்ளார்.

ஓட்டுனர்
பின்னர் அவருக்குச் சொந்தமான மாமல்லபுரம் பண்ணை வீட்டில் காவலாளியாக நியமித்து அங்கேயே தங்க வைத்திருந்தார். அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஸ்ரீகாந்த், அவரது மகன் கிருஷ்ணாவை டிரைவராக பணியில் சேர்த்துள்ளார். அதிலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று வர கிருஷ்ணாவுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளார்.

இரட்டை கொலை
இந்த நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரது நம்பிக்கியை பொய்யாக்கிவிட்டார் கொலையாளி கிருஷ்ணா.. கொலை செய்ய 3 மாதங்களாக திட்டம் தீட்டி வந்த கிருஷ்ணா, பிணங்களை புதைப்பதற்காக , பண்ணை வீட்டில் இருந்த தனது குடும்பத்தாரை 3 நாட்களுக்கு முன்பே ஏதேதோ காரணங்களைச் சொல்லி நேபாளத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அதிர்ச்சி தகவல்
அத்துடன் பண்ணை வீட்டில் உடலை புதைப்பதற்காக 7 அடி ஆழத்தில் குழிதோண்டி தயாராக வைத்திருந்துள்ளனர். கொலை செய்து விட்டு, உடலைகளையும் பண்ணை வீட்டில் புதைத்துவிட்டு , சுமார் 8 கோடி மதிப்பிலான 1000 சவரன் தங்கம், வைரம், வெள்ளி பொருட்களுடன் தப்பியோடிய கொலையாளிகள் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பன் ரவியையும், போலீஸார் 6 மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications