நடிகர் ஸ்ரீகாந்திடம் 10 மணி நேரம் விசாரணை.. விறுவிறுவென இழுத்துச் சென்ற போலீஸ்.. உடனே ரியாக்ஷன்
சென்னை: கொக்கைன் வகை போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தமிழ் நடிகரான ஸ்ரீகாந்திடம் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை நடத்தினார்கள்.. விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் முககவசம் அணிந்தபடி கொடுத்த ரியாக்ஷன் தான் சமூகஊடகங்களில் பரவி வருகிறது-
அண்மையில் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் என்பவரும், மற்றும் மேற்கு ஆப்ரிக்கா நாடான கானாவைச் சேர்ந்த ஜான் என்பவரும் கொக்கைகன் எனப்படும் போதைப்பொருள் கடத்திலில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கைனை போலீசார் பறிமுதல் செய்திருந்தார்கள். பொதுவாக கொகைன் மாதிரியான போதைப்பொருட்கள் விலை மிக மிக அதிகம். இது லட்சங்களிலும் கிலோ என்றால் கோடிகளில் போகிறது. இதனை உயர் பணக்காரர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதை யாருக்கெல்லாம் கொடுக்கிறார்கள்.. யார் யாரிடம் இதனை வாங்குகிறார்கள் என்பதையும் போலீசார் விசாரிப்பது வழக்கம் ஆகும்.

சென்னையில் விற்பனை
அந்த வகையில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவருக்கும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரமுகரான பிரசாத் எனவருக்கும் பழக்கம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனிடைமேய பிரதீப்குமார், பெங்களூரில் வசித்து வரும் நைஜீரியாவை சேர்ந்த ஜீரிக் மற்றும் கானாவை சேர்ந்த ஜான் ஆகியோரிடமிருந்து தான் கொக்கைன் போதைப்பொருளை வாங்கி தன்னுடைய நண்பரான பிரசாத் உள்ளிட்ட பலரிடம் சென்னையில் விற்பனை செய்ததாக கூறியிருக்கிறார்.
நடிகர்களுக்கு கொகைன் சப்ளை
பிரதீப் குமார் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜீரிக் உள்ளிட்ட பல்வேறு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பிரதீபின் நண்பர் பிரசாத்தை அண்மையில் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு போதைப்பொருளை விற்பனை செய்ததாக அதிர்ச்சி அடைய வைத்தார்.
ஸ்ரீகாந்த் கொகைன் பயன்படுத்தினாரா
அவர் சொன்னது உண்மையா என்பதை அறிய, பிரசாத்தின் செல்போனை நுங்கம்பாக்கம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ரோஜாக்கூட்டம், நண்பன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீகாந்த் அடிக்கடி தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை நுங்கம்பாக்கம் போதைப்பொருள் நுண்ணறிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஸ்ரீகாந்த் கைது
அத்துடன் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லேக் ஏரியா முதல் தெருவில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போதை பொருள் நுண்ணறிவு காவல்துறையினர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில் மீண்டும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். நடிகர் ஸ்ரீகாந்த்தை ரத்த பரிசோதனை முடிவினை தொடர்ந்து கைது செய்த போலீசார் கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரித்தனர்,
ஸ்ரீகாந்த் ரியாக்ஷன்
தொடர்ந்து மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும்முன்பு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் தான் மருத்துவமனை பரிசோதனைக்கு நுங்கம்பாக்கம் போலீசார் அழைத்து சென்றனர். அவர் முகத்தில் முகவசம் அணிந்தபடி, போலீசாரின் அருகில் ஸ்ரீகாந்த் அமர்ந்திருந்தார். அப்போது என்னசார் நடக்குது என்பது போல் இரு கைவிரல்களையும் விரிந்தபடி கேட்டதாக வீடியோவில் இருக்கிறது.அவரை பத்திரமாக போலீசார் அழைத்து சென்றனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications