பெருங்களத்தூர் டூ சோழிங்கநல்லூர்.. அப்படியே அதிரும் சென்னை.. யாரிந்த தாம்பரம் தம்பதி? ஜாக்கிரதை மக்களே
சென்னை: லீசுக்கு வீடு தேடுபவர்களுக்கு, நிறைய எச்சரிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் போலீசார் வழங்கியபடியே இருக்கிறார்கள். ஆனாலும், மோசடி பேர்வழிகளிடம் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் கொடுமை தொடர்கதையாகி வருகிறது.
வாடகைக்கு குடியிருப்போருக்கு சட்டவிதிகள் பல இருப்பதுபோலவே, லீஸூக்கு குடியிருப்பவர்களுக்கும் நிறைய சட்டவிதிகள் துணையிருக்கின்றன.. லீசுக்கு குடிபோகும்போது, போடும் ஒப்பந்தத்திலேயே பாதி பிரச்சனை நீங்கிவிடும்..

அவகாசங்கள்: அதேபோல, லீசுக்கு குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய சொல்ல முடியாது.. கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை அவகாசம் தந்துவிட்டு, அதற்கு பிறகே காலி செய்ய சொல்ல முடியும். அதேபோல், வீட்டை லீஸ் எடுத்தவருக்குப் பணம் தேவைப்படும் பட்சத்தில், பணத்தைத் திருப்பித் தர, வீட்டின் ஓனருக்கும் 3 மாதங்கள் அவகாசம் தர வேண்டும்..
ஒருவேளை வீட்டு உரிமையாளர், தான் பெற்ற ஒத்தித்தொகையை திருப்பியளிக்க மறுத்தால், அவர்மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து, சட்டரீதியாக பணத்தை மீட்கலாம்.. இப்படி ஏராளமான விதிமுறைகள், லீசுக்கு குடியிருப்பவர்கள் + உரிமையாளர்கள் என இரு தரப்புக்குமே இருப்பது, பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.
ஆனால், லீசுக்கு வீடு தேடுவோர்கள்தான் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில், லீசுக்கு வீடு தேடுவோரை பயன்படுத்தி சில இடங்களில் கொள்ளை லாபம் அடிக்கப்படுகிறது. குறிப்பாக, தாம்பரம், துரைப்பாக்கம்: பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, சேலையூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட புறநகர்ப்பகுதிகளில் இந்த மோசடிகள் நிறைய நடக்கின்றன.
வீடுகள் லீசுக்கு: சுற்றுவட்டார பகுதிகளில், "வீடுகள் லீசுக்கு உள்ளது" என்று ஆங்காங்கே விளம்பரங்களையும் காணமுடிகிறது. இதில், ஒருசிலர் நேர்மையாக இருந்தாலும், பலர் அப்படி நடந்து கொள்வதில்லை.
இப்பப்பட்டவர்கள் ஆன்லைனில் வீடு தேடும்போது, இந்த புரோக்கர்களிடம் சிக்கிவிடுகிறார்கள். லீசுக்கு இருப்பதாக, சில வீடுகளை, வீடியோவில் காட்டுகிறார்கள்.. பிறகு, அதற்கு டோக்கன் அட்வான்ஸ் என்ற பெயரில் ஒரு தொகையையும் கறந்துவிடுகிறார்கள். பிறகு, வீடு தேடுவோர் நேரில் செல்லும்போது, அப்படி ஒரு வீடே அந்த ஏரியாவில் இருப்பதில்லையாம்.
அதுமட்டுமல்ல, வாடகைக்கு இருக்கும் வீட்டை, லீஸ் என்ற பெயரில் ஏமாற்றுவது, லீசுக்கு வாங்கிய வீட்டை மறுபடியும் இன்னொருவருக்கு லீசுக்கு விடுவது, லீசுக்கு வந்த வீட்டை வாடகைக்கு விடுவது, இப்படியான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அக்கா தங்கை: கடந்த மாதம்கூட, தாம்பரத்தில் பிரேம் பாபு என்பவர் சிக்கினார்.. வீட்டின் ஓனர் உள்பட 42 பேரிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு 2 கோடி ரூபாயை கறந்திருக்கிறார் இந்த பிரேம் பாபு.. இப்படி மோசடி செய்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கையையும் வாழ்ந்து வந்திருக்கிறார்.. அக்கா, தங்கை என்று 2 பேரையும் மணந்து, அந்த மோசடி பணத்தை அவர்களுக்கு செலவு செய்து வந்துள்ளார்.. இறுதியில் அவரை போலீசார் கைது செய்தனர்.
இதோ இப்போது ஒரு ஜோடியே போலீசில் சிக்கியிருக்கிறது.. "சன் ஹோம்" என்ற நிறுவனத்தை இந்த தம்பதியினர் சேர்ந்து நடத்தி வருகிறார்கள்.. தாம்பரம், பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, சேலையூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் "வீடுகள் லீசுக்கு உள்ளது" என்று ம் இந்த இந்த தனியார் நிறுவனம் ஆங்காங்கே விளம்பரப்படுத்தியிருக்கிறது.
விளம்பரங்கள்: இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, ஏராளமானோர் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் தம்பதியை அணுகியிருக்கிறார்கள்.. ஒவ்வொரு வீட்டுக்கும், ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அட்வான்ஸ் தந்துவிட்டு, அவர்களது வீடுகளில் லீசுக்கும் வசித்துள்ளனர்.
ஆனால், அவர்கள் அவர்கள் இதுவரை குடியிருந்தது லீசுக்கு இல்லையாம்.. வாடகை வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. பிறகு ஆத்திரமடைடந்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார்களை தந்துள்ளனர்.
அட்வைஸ்: அதனால், இனிமேல், சென்னையில் குத்தகைக்கு வீடுவாங்குவோர் முதலில், அவர் தான் வீட்டின் உரிமையாளரா என்பதை உறுதி செய்யாமல் குத்தகைக்கு வீடு பார்ப்பது ஆபத்தானது என்றும், ஏனெனில் சென்னையில் புதிதாக வந்தவர்கள்,குறைவான லீஸ் தொகையில் வீடுதேடுபவர்களை கூறிவைத்து ஏமாற்றுவது அடிக்கடி நடப்பதால், கவனமாக இருக்க வேண்டும் போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications