வேட்டியால் கள்ளக்காதலியின் கழுத்தை இறுக்கி கொலை.. புடவையில் தூக்கிட்டது போல் நாடகம் போட்டவர் கைது
சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் கள்ளக்காதலியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.
பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 38 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நேற்றிரவு மர்மமான முறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரியமேடு போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் மோகனா என்பது தெரியவந்தது. அவர் ரயில்வே துறையில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமியுடன் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்தனர். சாத்தாங்காடு பகுதி அருகே இருவரும் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர்.
பின்னர் இருவரும் ஆட்டோவில் வந்து பெரியமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறில் வீராசாமி, தான் அணிந்திருந்த வேட்டியால் மோகனாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க மோகனாவே தற்கொலை செய்து கொண்டது போல் மின்விசிறியில் அவரது புடவையால் மோகனாவின் சடலத்தை தூக்கில் தொங்குவது போல் செட் அப் செய்து விட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து பெரியமேடு போலீஸார், வீராசாமியை கைது செய்தனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications