நில அபகரிப்பு வழக்கு: 40 செம்மரக் கடத்தல் கேஸ் பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேஷ் கூட்டாளிகளுடன் கைது
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் பாஜக பிரமுகரும் 40-க்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவருமான கே.ஆர்.வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மண்ணடியை சேர்ந்த சுல்தான், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர். அவரிடம் பாடியநல்லூரை சேர்ந்தவர்கள் நிலம் ஒன்றை விற்பனை செய்து தர அணுகியுள்ளனர். இதனடிப்படையில் சுல்தான், அப்பகுதிக்கு சென்று நிலத்தைப் பார்வையிட்டார்.
ஆனால் அந்த நிலம் தங்களுடையது என பாஜக மாஜி ஓபிசி பிரிவு செயலர் வெங்கடேஷ், பாஜகவின் மற்றொரு பிரமுகர் நரேஷ் உள்ளிட்டோர் என மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சுல்தான் தரப்பு போலீசில் புகார் செய்தது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் சுல்தான் புகாரின் பேரில் பாஜக பிரமுகர்களான வெங்கடேஷ், நரேஷ் உள்ளிட்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசிடம் சிக்கிய வெங்கடேஷ் யார் என்பது குறித்து பரபரப்பான தகவல்களும் வெளியாகி உள்ளன.
செம்மரக் கடத்தல்: ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டில் செம்மரம் கடத்தியதாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் வெங்கடேஷ் மீது உள்ளன. ஆந்திராவில் பல முறை செம்மரக் கடத்தில் வழக்கி சிக்கி ஜாமீனில் வெளிவந்தவர் வெங்கடேஷ். அதிமுகவில் கட்சிப் பொறுப்பு வகித்த அவர் பின்னர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் வெங்கடேஷ் இணைந்த போதே, செம்மரக் கடத்தல் மன்னனுக்கு பாஜகவில் இடமா? என சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications