Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆற அமர.. நிறுத்தி நிதானமாக.. மொத்தம் 5 முறை.. அப்பப்பா.. பதற வைத்த மருமகள்.. பெண்ணா இவர்!

சென்னையில் 3 பேர் துப்பாக்கியால் கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிறுத்தி நிதானமாகவே 3 பேரையும் 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்றாராம் மருமகள் ஜெயமாலா.. சென்னையில் மாமனார், மாமியார், கணவனை கட்டிப்போட்டுவிட்டு, துப்பாக்கியால் கொன்ற ஜெயமாலாதான் இன்றைக்கும் ஹாட் டாப்பிக்!

சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.

இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. இப்போது கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்.

 கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

ஜெயமாலா - ஷீத்தல் தம்பதிக்கு கல்யாணமாகி 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்... தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்ததால், டைவர்ஸ் கேட்டுள்ளார் ஜெயமாலா. இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார். அதாவது அந்த சொத்தின் மதிப்பு 5 கோடி ரூபாயாம்.

 மாமனார்

மாமனார்

மொத்த சொத்தையும் எப்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுத்துள்ளார்.. அதனால் மருமகள் கேட்டபடி சொத்து எழுதி தர ஒப்புக்காள்ளவில்லை.. இதுதான் வாக்குவாதமாக தொடர்ந்து வந்துள்ளது. நேற்று முன்தினமும் அப்படித்தான் புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வீட்டிற்குள் நுழைந்தார் மருமகள் ஜெயமாலா.

கல்யாணம்

கல்யாணம்

தன்னுடைய மாமனாரிடம் "ஒரு நோயாளியை எனக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வெச்சீங்க.. உங்க மகனால்தான் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது.. அதனால்தான் ரூ.5 கோடி ஜீவனாம்சம் வேண்டும்.. சொத்திலும் பங்குதர வேண்டும்" என்று சண்டை போட்டதுடன், கணவன், மாமனார், மாமியாரின் கைகளை, கயிறு கொண்டு கட்டினார்.. தன் கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து, 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். 3 பேரும் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

 மாமனார்

மாமனார்

துப்பாக்கியால் சுடும்போது, அந்த சத்தம் வெளியே கேட்டுள்ளது.. அந்த தெரு முழுக்க பட்டாசு வெடித்து கொண்டு இருந்ததால், இதுவும் தீபாவளி பட்டாசு என்றே மக்கள் நினைத்துவிட்டனராம்.. இதையடுத்து தனிப்படை போலீசார் புனேக்கு விரைந்து, கொலையாளிகள் ஜெயமாலா உட்பட 3 பேரை கைது செய்தனர்.

பேட்டி

பேட்டி

இதை பற்றி நம் போலீசார் சொல்லும்போது, "மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போலீசார் நமக்கு உதவி செய்துள்ளனர்... ஜெயமாலா, கொலை செய்ய வேண்டும் என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டுதான் துப்பாக்கியுடன் வந்திருக்கிறார்.. ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதுபோலவும் தெரியவில்லை.

மருமகள்

மருமகள்

ஏன் என்றால், ஒவ்வொருவரையும் 5 முறை துப்பாக்கியால் நிறுத்தி நிதானமாக சுட்டு கொன்றுள்ளார்.. அதனால் இந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலை... அதேபோல, இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தமிழகத்தை சேர்ந்தது கிடையாது... வெளியில் இருந்து வந்தது... லாக்கர் காணவில்லை என்று சொல்கிறார்கள்.. அதை பற்றி விசாரணை நடந்து வருகிறது.

கைது

கைது

இந்த வழக்கில் இன்னும் 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்.. அவர்களைதான் தேடி வருகிறோ.. அவர்கள் குறித்து விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்... கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்துவிட்டோம்.. சென்னை போலீசார் வருவதை அறிந்த, குற்றவாளிகள் புனேயில் இருந்து சோலாப்பூருக்கு காரில் தப்பி சென்றனர்... சென்னை போலீசார், விரட்டி சென்றுதான் அவர்களை பிடித்தனர்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+