சர்ச்சை வீடியோ.. வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் கிடைப்பதில்லை என்று வீடியோ வெளியிட்ட மூத்த செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சென்னை மருத்துவமனைகளில், போதிய படுக்கை வசதி இல்லை என்பதால், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள் என்று மருத்துவர்கள் கூறுவதாக, நடிகரும், செய்தி வாசிப்பாளரான வரதராஜன் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதங்களில் வீடியோவை ஷேர் செய்தனர். சென்னையின் நிலை குறித்து மக்களிடையே அச்சத்தை அதிகரித்தது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், வரதராஜனின் பேச்சால் கடும் அப்செட் ஆனார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான படுக்கை வசதி உள்ளது. இங்கேயுள்ள நிருபர்கள் இப்போதே கூறுங்கள். பத்திரிக்கையாளர்களில் எத்தனையோ பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதே. யாருக்காவது படுக்கை வசதி இல்லாமல் துன்பத்தை அனுபவித்தீர்களா? இங்கேயே சொல்லுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
அத்துடன் வரதராஜன் தவறான தகவல்களை கூறியிருப்பதாகவும், அவர் மீது தொற்று நோய் சட்டப்பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மோசமான ஒரு காலகட்டத்தில் வதந்தி பரப்புவோரை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் பெருந்தொற்று நோய் சட்டத்தின்கீழ் அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மூத்த செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது தொற்று நோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications