ECR நாள் குறிச்சாச்சு.. சென்னையின் மிக முக்கிய ப்ராஜெக்ட்.. கிழக்கு கடற்கரை சாலை அடியோடு மாறுது!
சென்னை: கோவளம் முதல் அக்கரை வரையிலான கிழக்கு கடற்கரை சாலை (ECR) 8.6 கி.மீ. நீளத்திற்கு ஆறு வழித்தடமாக விரிவாக்கப்படும் பணிகள், ஜனவரி மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் இத்திட்டம் நீண்டகாலமாக தாமதமாகி வந்ததாகவும், தற்போது அவை சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கோவளம் முதல் அக்கரை வரையிலான சாலை
நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்களின்படி, 1.2 கி.மீ. நீளமுள்ள சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. "நில ஆவணங்களில் சில முரண்பாடுகள் இருந்தன. அவை சரிசெய்யப்பட்டுள்ளன. நில உரிமையாளர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்," என அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான சாலையை விரிவாக்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டு ₹10 கோடி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும், ஏராளமான சிறிய நிலங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகள் மற்றும் அடிக்கடி நடந்த நில விற்பனைகள் காரணமாக இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது.
2018-19 ஆம் ஆண்டில், சாலை விரிவாக்கப் பணிகள் வேகமெடுத்த போதிலும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பணிகள் தடைபட்டன. கடந்த ஆண்டு முதல் மீண்டும் பணிகள் வேகம் பிடித்தன.
கிழக்கு கடற்கரை சாலை (ECR)
இது போக பக்கிங்ஹாம் கால்வாய்க்கு குறுக்கே அமைக்கப்படவுள்ள கிழக்கு கடற்கரை சாலை (ECR) - ஓல்ட் மகாபலிபுரம் சாலை (OMR) இரும்பு இணைப்புப் பாலத்திற்கான திட்ட வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய சாலை தோராயமாக 1.465 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது தோராயமாக நான்கு வழிப்பாதையாகவும், இருவழிப் போக்குவரத்து வசதி கொண்டதாகவும் அமையவுள்ளது.
தற்போது தோரைப்பாக்கம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் அப்பகுதி போக்குவரத்து நெரிசலைக் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம்
பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்படவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ECR-OMR இணைப்புச் சாலைப் பாலத்திற்கான CRZ அனுமதிக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை விண்ணப்பித்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பக்கிங்ஹாம் கால்வாயின் மீது இதற்காக இரும்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. தொரைப்பாக்கம் (ஓஎம்ஆர்) முதல் நீலாங்கரை (ஈசிஆர்) ஆகியவற்றை இணைக்கும் இரும்புப் பாலத்தை ₹37 கோடிக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்க உள்ளது. இதற்கான டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூரில் நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை, 36 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் bund மற்றும் அப்ரோச் சாலைகள் அமைக்கப்படும்.
4 மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் வெளியேறும் வசதியுடன் , படகு இயக்கத்தையும் அனுமதிக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும். ஏற்கனவே OMR பக்கத்திலிருந்து 1.4 கிமீ இணைப்புச் சாலை ஒரு பகுதி முழுமையடைந்துள்ளது. ஒரு கட்டமாக தொரைப்பாக்கம் மற்றும் நீலாங்கரையை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே நகரின் OMR-ECR இணைப்பு இரும்பு பாலம் கட்டும் பணி இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 கோடியில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர், மணியம்மை தெரு-வீரமணி தெரு, அறிஞர் அண்ணாசாலை-பாண்டியன் சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் 3 இரும்பு பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2019 டிசம்பரில் கால்வாயின் குறுக்கே ஆறு இடங்களை குடிமை அமைப்பு இறுதி செய்து வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications