Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புழலில் ஆண் குழந்தைக்கு 12 லட்சம்.. பேரம் பேசிய தீபா உள்பட மூன்று பெண்கள்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புழல் அருகே வறுமையில் உள்ள இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து குழந்தை கடத்தல் கும்பல், அவரிடம் உள்ள 3 வயது ஆண் குழந்தையை ரூ.12 லட்சத்துக்கு விற்க முயன்றுள்ளது. இந்த விவகாரத்தில் குழந்தையின் தாய் உள்பட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். குழந்தை கடத்தல் கும்பலை பொதுமக்கள் போல் பேசி போலீசார் பிடித்துள்ளனர். இது எப்படி சாத்தியமானது.. குழந்தை கடத்தல் கும்பல்களிடம் விழிப்புடன் இருப்பது எப்படி என்று பார்ப்போம்.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டால் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.. இந்தசிக்கல் ஒருபுறம் எனில், குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல் பல்வேறு நூதன முறையில் செயல்படுகிறார்கள். குழந்தைகளை வளர்க்க முடியாமல் கஷ்டப்படுபவர்களை மூளைச்சலவை செய்து கடத்தி விற்பதும் நடக்கிறது. போலீஸ் என்று தெரியாமல் போலீசிடமே குழந்தை கடத்தல் தொடர்பாக பேரம் பேசி, மாட்டிக்கொண்டிருக்கிறது கடத்தல் கும்பல்.

Chennai Puzhal Child Trafficking Racket Busted A Call for Public Awareness

ரதிதேவி எடுத்த முடிவு

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த 37 வயதாகும் வித்யா என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கிறார்கள். இவரது பள்ளி தோழியான ரதிதேவி(29), சென்னை தண்டையார்பேட்டை சோனியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். அவரும் கணவரை பிரிந்து, 3 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்திருக்கிறார். கணவரை பிரிந்து தான் குழந்தையுடன் வறுமையில் வாடுவதை ரதி தேவி கூறியிருக்கிறார். இதனால் வித்யாவுடன் ஒரே வீட்டில் ரதிதேவியும் சேர்ந்து வசித்து வந்தார். அப்போது ரதிதேவி, எனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக விரக்தியுடன் கூறியிருக்கிறார். அவருக்கு வித்யா ஆறுதல் கூறினார்.

குழந்தை விற்க ஏற்பாடு

பின்னர் வித்யா, "உன் குழந்தையை கொல்வதற்கு பதில் யாருக்கேனும் விற்றுவிடலாம். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்" என கூறினார். அதற்கு ரதிதேவியும் சம்மதித்திருக்கிறாராம். வித்யாவின் மற்றொரு தோழியான புழல் பகுதியை சேர்ந்த தீபா(26) என்பவரை தொடர்பு கொண்டனர். தீபா, புழல் பகுதியில் ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். தீபாவிடம் குழந்தையை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு தீபாவும் சம்மதித்துவிட்டார்.

பேரம் பேசிய தீபா

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபா, குறிப்பிட்ட தேசிய கட்சியின் பட்டியலின பிரிவில் பொறுப்பில் இருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் குழந்தை விற்பனை சம்பந்தமாக பேசியிருக்கிறாராம். அவரும் ஓரிரு நாட்களில் சொல்வதாக கூறியிருக்கிறாராம். ஆனால் குழந்தையை விற்பனை செய்வதை விரும்பாத கார்த்திக், இதுபற்றி புழல் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் விவகாரம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு சென்றது. அவர் உடனடியாக உத்தரவிட்டு குழந்தை கடத்தல் கும்பலை பிடிக்க உத்தரவிட்டார்.

12 லட்சத்திற்கு ஆண் குழந்தை

இதன்படியே சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் குமார் மேற்பார்வையில் புழல் உதவி கமிஷனர் சத்யன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், பெருந்துறை முருகன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், வித்யாவை தொடர்பு கொண்டு தனக்கு குழந்தை வேண்டும் என பொதுமக்கள் பேசுவது போல் கேட்டுள்ளார். பேசுவது போலீஸ் என்பது தெரியாமல் வித்யாவும், ரூ.15 லட்சம் கொடுத்தால் குழந்தையை விற்பனை செய்வதாக கூறியிருக்கிறார். அதற்கு இன்ஸ்பெக்டர், ரூ.12 லட்சம் தருவதாக பேரம் பேசினார்.

புழல் பூங்காவில் கைது

இதையடுத்து நேற்று புழல் பிரிட்டானியா நகர் அருகில் உள்ள ஒரு பூங்காவுக்கு குழந்தையை கொண்டு வந்து கொடுத்துவிட்டு பணத்தை வாங்கி செல்லும்படி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். தொடர்ந்து தனிப்படை போலீசார் புழல் பிரிட்டானியா நகர் அருகில் உள்ள ஒரு பூங்காவில் தயாராக இருந்தனர். அப்போது குழந்தையை விற்பனை செய்வதற்காக வந்த வித்யா, ரதிதேவி மற்றும் தீபா ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 வயது ஆண் குழந்தையை மீட்டனர். மேலும் இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 3 பெண்களிடமும் மேலும் விசாரித்து வருகின்றனர்.

ஆசைப்பட்ட பெண்கள்

குழந்தையை விற்று பணம் சம்பாதிக்கப்பட்ட பெண், ஐடியா கொடுத்து வழிநடத்திய பெண், விற்றுத்தருவதாக போலீசிடமே பேரம் பேசிய பெண்.. மூன்று பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குழந்தை கடத்தல் விவகாரத்தில் சென்னை போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். யாராவது குழந்தைகளை விற்கிறார்கள், கடத்துகிறார்கள் என்றால் உடனே காவல்நிலையத்தில் தெரிவித்தால், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+