சென்னையை வெளுத்தெடுத்த மழை.. வெள்ளத்தில் நீச்சல்..உள்ளேயும் தண்ணி..வெளியேயும் தண்ணி..வடியுமா?
சென்னை: சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு சென்னை மாநகராட்சி புகைப்படம், வீடியோ பதிவிட்டு வெள்ளம் வடிந்துள்ளதை ஆதாரத்துடன் ட்வீட் செய்துள்ள நிலையில் இதுவும் சென்னைதான் என்று பல நெட்டிசன்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பதிவிட்டு வருகின்றனர்.
மயிலாப்பூரிலும் மந்தை வெளியிலும், மேற்கு மாம்பலம் பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் மட்டும் வெள்ள நீர் வடிந்துள்ளது. அதே நேரத்தில் பட்டாளம், புளியந்தோப்பு உள்ளிட்ட ஏரியாக்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இதுவும் சென்னைதான் இந்த பகுதிகளையும் கவனியுங்கள் மேயரே என்று பலரும் ட்விட்டரிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து
சென்னை பிராட்வேயில் இருந்து பயணிகளுடன் மூலக்கடை நோக்கிச் சென்ற 64c என்ற மாநகரப் பேருந்து, சற்று முன் வியாசர்பாடி பகுதியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்றது போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் பேருந்து செல்ல முடியாமல், உள்ளேயே சிக்கிக் கொண்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து போலீஸார், மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்ட பேருந்தை கயிறு கட்டி இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தண்ணியில சென்னையா
இதுவும் சென்னைதான் வடியாத வெள்ளம்.. தண்ணியில சென்னையா? சென்னையில தண்ணியா? கொஞ்சம் கவனிங்க என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

மழை நீரில் நீச்சல்
புளியந்தோப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த வெள்ளநீரில் ஒருவர் ஜாலியாக நீச்சல் அடிக்கிறார். போதை ஆசாமியாக இருக்கும்.. உள்ளேயும் தண்ணி...வெளியேயும் தண்ணி வெள்ளம் எப்போது வடியுமோ?

வடக்கு உஸ்மான் சாலை
தி. நகர் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் சிக்கியது. பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தாலும் வடக்கு உஸ்மான் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

மாயமான வெள்ள நீர்
சென்னைவாசிகளே கோபாலபுரம், போயஸ் ரோடு கஸ்தூரி ரங்கன் தெரு, முத்தையா தெரு கடந்த ஆண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இந்த ஆண்டு மழை நீர் வடிந்து விட்டது என்று சென்னை மாநகராட்சி ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளது.

மேற்கு மாம்பலம்
மேற்கு மாம்பலம் பகுதியில் கடந்த ஆண்டு வெள்ளம் சூழ்ந்த இடம்..இந்த ஆண்டு 5 மணி நேரமாக தொடர் மழை பெய்தும் தண்ணீர் இல்லை என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

புளியந்தோப்பு
கனமழை நீடிப்பதால் புளியந்தோப்பு பகுதியில் வெள்ளநீரின் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த பகுதிகளின் அடிப்படை தேவைகளை கவனிக்க வேண்டும். வெள்ள நீர் வடிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications