கல்லூரி புள்ளிங்கோவிற்கே சவால் விட்ட பள்ளி மாணவி.. மின்சார ரயிலில் ஆபத்தான சாகசம்!
சென்னை : சென்னை மின்சார ரயிலில், கல்லூரி மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அரசு பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயிலில் கால்களை தரையில்வைத்தவாறு சாகசம் செய்துள்ளார். ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்த நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Recommended Video
ஒருசில கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல், ரயில் மற்றும் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை அவர்கள் சாசகம் என்று கூறிக்கொள்வதோடு, ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டும் வருகின்றனர். இவர்களின் ஆபத்தான பயணத்தை, அவர்களுடன் பயணிக்கும் சிலரும், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர்.

இதுபோன்ற ஆபத்தான பயணங்களில் ஈடுபடக்கூடாது என்றும் போலீசாரும், பெற்றோரும் தொடர்ந்து அறிவுரைகள் எடுத்துரைத்தும் ஒருசில மாணவர்கள் திருந்தியபாடில்லை. ஆனால், தற்போது மாணவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளி மாணவியும் ஓடும் ரயிலில் சாகசம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். ரயில் புறப்படும் நேரத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் சிலர் ரயிலில் ஏறினர். அப்போது அரசு பள்ளி மாணவி ஒருவர், ரயிலில் படிக்கட்டு அருகே நின்றவாறு, நடைமேடையில் கால்களை நடைமேடை முடியும் வரையில் தேய்த்தவாறு மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்தார்.
இதனை அந்த ரயில் பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சி பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி, பெற்றோர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பள்ளி மாணவி ஒருவர் கல்லூரி புள்ளிங்கோவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஸ்கேட்டிங் செய்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபடாதவாறு, ரயில் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் எச்சரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications