தோண்ட தோண்ட பயங்கரம்.. 170 ஆபாச வீடியோ, 17 பள்ளி மாணவிகள்! சென்னை தி.நகர் நதியாவின் பகீர் விபச்சாரம்
சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. பெண் பாலியல் புரோக்கர் தொடர்பான விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ரவுடி கருக்கா வினோத். இவருக்கு 42 வயதாகிறது.. இந்த வழக்கை என்ஐஏ தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.. அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

அத்துடன், கருக்கா வினோத்தை காவலில் எடுத்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.. இதனிடையே, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பும், கடந்த 2022ம் ஆண்டு கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என தெரியவந்ததும், அதுகுறித்தும் விசாரணை ஆரம்பமானது.
வினோத்: இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் ரவுடி கருக்கா வினோத் தொடர்புடைய நபர்கள் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் நதியா என்பவர் பெயர் சிக்கியது.. தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்தவர் இந்த நதியா.. 37 வயதாகிறது.. கருக்கா வினோத் அன்று சிறையில் இருந்தபோது, அவரை பல லட்சம் செலவு செய்து நதியா ஜாமீனில் எடுத்திருக்கிறார் நதியா.
அதுமட்டுமல்ல, கருக்கா வினோத்துடன் சேர்ந்து பாலியல் தொழில், மது பாட்டில்கள், கஞ்சா வியாபாரம் போன்றவற்றை செய்திருக்கிறார் இந்த நதியா.. இதற்கு பிறகுதான், நதியா வீட்டிற்குள் சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது, பல பூதாகரமான விஷயங்கள் வெளிவரத்துவங்கின.
ஆபாச வீடியோ: மொத்தம் 17 பள்ளி மாணவிகளின் 170 ஆபாச வீடியோக்கள், நதியா வீட்டில் இருந்ததாம்.. இந்த ஆபாச வீடியோக்கள் எல்லாமே பள்ளி மாணவிகளுடையது என்பதால், டிஜிபி சங்கர் ஜிவால் கவனத்திற்கு போலீசார் இந்த விஷயத்தை கொண்டு சென்றனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டதையடுத்து, மொத்த போலீஸ் டீமும் நதியா விவகாரத்தில் களமிறங்கினார்கள்.. அப்போதுதான் சென்னை வளசரவாக்கம் அப்பார்ட்மென்ட்டில் இந்த விபச்சாரம் நடப்பாக கேள்விப்பட்டு அங்கு விரைந்தனர்.. அந்த வீட்டிற்குள், பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதை பார்த்து போலீசார் அதிர்ந்து நின்றார்கள்..
தாத்தா: 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த ராமச்சந்திரன் என்ற 75 வயது தாத்தாவும் சிக்கினார். உள்ளூர் புரோக்கர்கள் மூலம் தன்னிடம் சிக்கிய சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார் நதியா.
காமம் தலைக்கேறிய வயதானவர்கள் பலர், தங்களுக்கு சிறுமிகள் தான் வேண்டும் என்று நதியாவிடம் கேட்பாரகளாம்.. உடனே நதியாவும், 17 வயதே ஆன மாணவிகளை, அவர்களுடன் அனுப்பி வைப்பாராம்.. ஒருநாள் இரவுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வசூலித்திருக்கிறார் நதியா.. இதையடுத்து, கடந்த 18ம் தேதி நதியா, அவரது சகோதரி சுமதி, 2 கணவர், அந்த 75 வயது தாத்தா உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்..
மாணவிகள்: இந்த வழக்கில் பள்ளி மாணவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் நல குழு இதுதொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவினரிடம் இருந்து விசாரணை அறிக்கையை பெற்று தனியாக விசாரணையை துவக்கியிருக்கிறார்கள்.
இதன்காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்களை லிஸ்ட் எடுத்து, ரகசியமாக இந்த விசாரணையை குழந்தைகள் நல குழு நடத்தி வருகின்றனர்.. இந்த விசாரணை முடிந்தால்தான், பள்ளி மாணவிகள் எத்தனை பேர் நதியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற முழு விபரங்கள் தெரியவருமாம்.. மொத்தத்தில், பள்ளி மாணவிகளின் வாழ்க்கையை பந்தாடிய நதியா விவகாரம், பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
விஸ்வரூபம்: பாலியல் தொழிலால் லோக்கலில் எழும் சிக்கல்களை சமாளிப்பதற்காகவே, கருக்கா வினோத்தும் இந்த பாலியல் கும்பலுக்கு உதவியிருப்பதாக கூறுகிறார்கள்,. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பெயரில்தான், விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.. இவர்கள் யார் யாருக்கு சிறுமிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் குறித்து விசாரணை தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications