சென்னை தண்டையார்பேட்டையில்.. 7 வயது சிறுமியை கடித்து குதறிய அமெரிக்க ரக நாய்! ஷாக்
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுமியை அமெரிக்கன் 'புல் டாக்' ரக நாய் கடித்து குதறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்ததில் சிறுமியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து நாயை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளரை விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த நாய்களை வளர்க்க கூடாது என்று ஏற்கெனவே அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பிட்புல் டெரியர்
அமெரிக்கன் ஸ்டாஃபர்ட்ஷயர் டெரியர்
ரோட்வீலர்
டகோசா அர்ஜென்டினோ
அமெரிக்கன் புல்டாக்
கேன் கோர்ஸோ
வோல்ஃப் டாக்
பண்டாக்
போயர் போல்
கங்கல் ஷெப்பர்ட் டாக்
கவ்காசியன் ஷெப்பர்ட் டாக்
அலாஸ்கன் மலாமட்
சார்பே
சைபீரியன் ஹஸ்கி
அக்கிதா
மாஸ்டிஃப்
டெரியர்
பூசெரன்
ஃபிலா பிரேசிலீரோ
டோசா இனு
அகுவாக்க்
பிரசா கனாரியோ
போன்ற வெளிநாட்டு நாய்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாய்களை வளர்ப்பவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பாயும். நாய் பிறரை கடித்திருப்பின் அபராதம் அல்லது சிறை தண்டனை, அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். மட்டுமல்லாது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 289 பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications