சென்னையில் துப்பாக்கி.. கூமாபட்டியில் பெட்ரோல் குண்டு.. பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தால் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவொற்றியூரில் போதையில் ஒருவர் மற்றொருவரை துப்பாக்கியால் சுடும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூமாபட்டியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூரில் இரு இளைஞர்களிடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், ஒருவர் துப்பாக்கியை எடுத்து வந்த சுட்ட சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது. திருவொற்றியூர் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார், ஜெபின் ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக சரியாகப் பேசிக்கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

Chennai Shocker Drunk Man Shoots Another Person in Thiruvottiyur Video Surfaces

இந்நிலையில் இருவரும் போதையில் இருந்த நிலையில் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஜெபின் ஆத்திரம் தலைக்கேறி, தனது வீட்டுக்கு ஓடிச் சென்று துப்பாக்கி மற்றும் கத்தியை எடுத்து வந்துள்ளார். ஜெயக்குமாரிடம் வந்து, உன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவா? கத்தியால் வெட்டிக் கொல்லவா என ஆவேகமாகக் கேட்டபடி, துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத ஜெயக்குமார், ஜெபின் கையில் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். துப்பாக்கியை பறிக்க முடியாத நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுதொடர்பாக ஜெயக்குமார் அளித்த புகாரின்படி, ஜெபின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல, படப்பை அருகே குடும்பத் தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஆதனூர் ஊராட்சி தலைவரின் மருமகன் தமிழ்ச்செல்வன், தன்னிடமிருந்த துப்பாக்கியைக் காட்டி தமிழ் அமுதன் என்பவரை மிரட்டியுள்ளார். தமிழ் அமுதனின் உறவினரான டேனியல், தமிழ்ச்செல்வனிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பேருந்து நிலையத்தில் பேக்கரி கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். ஜூஸ் வாங்க வந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில், பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் காவல்துறை திறம்படச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+