பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்னையில் நாளை 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை: புறநகர் மின்சார ரயில்கள், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் பராமரிப்பு பணிகளுக்காக புறநகர் மின்சார ரயில்கள் அவ்வப்போது ரத்து செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், நாளை 11 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் இடையே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக நாளை 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், ரத்து செய்யப்பட்டுள்ள புறநகர் ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

- சென்னை கடற்கரையில் இருந்து நாளை மாலை 6.45, இரவு 8, 9.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள்
- சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து இருந்து நாளை இரவு 7.35, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள்
- கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில்கள்
ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இதனால் வடசென்னை மக்கள், தங்களின் பயண ஏற்பாட்டை மாற்றியமைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
வடசென்னையை சென்னையின் மத்திய மற்றும் தென் சென்னையுடன் இணைப்பதில் புறநகர் ரயில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. திருவொற்றியூரில் இருந்து சென்ட்ரல் வர வேண்டும் எனில், பேருந்தில் குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும். ஆனால் புறநகர் ரயில் எனில் 20 நிமிடங்களில் வந்துவிடலாம். அதேபோல, எண்ணூர் மற்றும் எர்ணாவூர் பகுதிகளிலிருந்து சென்னையின் மையத்திற்கு பேருந்தில் வர வேண்டும் என்றாலும் நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் புறநகர் ரயில்கள் விரைவாக கொண்டு வந்து சேர்த்துவிடும்.
ஆனால் சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால், வடசென்னை மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மக்களை மேலும் பாதிப்படைய செய்திருக்கிறது.
-
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
இரட்டை ரயில் பாதை பணி.. குமரி செல்லும் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications