எண்ணூர் ரயில் நிலையத்தில் கோளாறு! புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு.. வடசென்னை மக்கள் கொந்தளிப்பு
சென்னை: எண்ணூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கிருந்து சென்ட்ரல் வரும் புறநகர் மின்சார ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை - நெல்லூர் என 176 கி.மீக்கு புறநகர் மின்சார ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த பாதை பெரும்பாலான வடசென்னையை கவர் செய்கிறது. பேசன் பிரிஜ், தண்டையார் பேட்டை, கொருக்கு பேட்டை, வஊசி, திருவொற்றியூர், விம்கோ போன்ற ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. இங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வேலைக்காக தென் சென்னையை நோக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு இந்த புறநகர் ரயில்கள் மட்டுமே எளிய போக்குவரத்து வசதியாகும். பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேராது என்பதால் ரயில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில் எண்ணூர் ரயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு ஏற்பட்டதால் அங்கிருந்து சென்ட்ரல் நோக்கி வரும் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் மக்கள் எண்ணூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனையடுத்து பிரச்னையை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரலிலிருந்து தாம்பரம், அரக்கோணம் போன்ற வழித்தடங்களில் ரயில்களை இயக்க 4 பாதைகள் இருக்கும் நிலையில், சென்ட்ரல் டூ எண்ணூர் வரை ரயில்களை இயக்க மூன்று பாதைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால் ரயில்கள் அடிக்கடி வராமல் 30 நிமிடங்களுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த ரயிலும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கொதித்தெழுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications