மனைவி குளிக்கும்போது படம் பிடித்த நண்பன்.. போலீசுக்கு போன கணவன்.. வழக்கில் ட்விஸ்ட்.. 2 பேரும் கைது
சென்னை: சென்னை அருகே ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரையும் அந்த பெண்ணின் கணவரையும் போலீஸார் கைது செய்துள்ளார்கள்.
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற தம்பதி, அங்கு காவலர்களிடம் ஒரு புகாரை கொடுத்தனர். அந்த புகாரில் தனது நண்பன் தன் மனைவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்தார்.
தொடர்ந்து அந்த வீடியோவை என் மனைவியிடம் காட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் அளித்தார் அந்த கணவர். இவர்களின் புகார் தாம்பரத்திற்குள்பட்டது என்பதால் குரோம்பேட்டை போலீஸார் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

நேபாள மொழி
இருவரும் நேபாள மொழியில் பேசியதால் போலீஸாருக்கு புரியவில்லை. இதையடுத்து டிரான்ஸ்லேட்டர் ஒருவரை அழைத்து வந்து விசாரணையை தொடங்கினர். அப்போது போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்த ஜோடிகள் இருவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களாம். காலித் ஹாசன் (24), அவரது மனைவி (14 வயது)!

சிறுமி மீது காதல்
ஆம் அவரது மனைவி ஒரு சிறுமி. சிறுமியை பள்ளிக்குச் செல்லும் போது காலித் திருமணம் செய்து கொண்டாராம். திருமணம் முடிந்த பிறகு எங்கு செல்வது என நினைத்த போது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தபரூக் ஹுசேன் (28) என்பவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. சென்னை குரோம்பேட்டை துர்கா நகரில் தங்கி கட்டட வேலை செய்து வரும் அவரை தொடர்பு கொண்டார் காலித்.

ஒரே வீட்டில் நண்பனுடன் ஜோடி
அப்போது மனைவியை அழைத்து கொண்டு சென்னைக்கு வருவதாக கூறிவிட்டு இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்துள்ளனர். நண்பர் தபரூக் தங்கியிருந்த அதே வீட்டில் ஜோடியும் தங்கினர். தபரூக்குடன் காலித்தும் கட்டட வேலைக்கு சென்றுவந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தபரூக் உடல்நிலை சரியில்லை என கூறி வீட்டிலேயே இருந்துவிட்டார், காலித் மட்டும் வேலைக்கு சென்றுள்ளார்.

குளிக்க சென்ற 14 வயது சிறுமி
அப்போது வீட்டில் இருநத 14 வயது சிறுமி குளிக்க சென்றுள்ளார். அப்போது தபரூக் தனது செல்போனில் சிறுமி குளிப்பதை வீடியோவாக எடுத்துவிட்டார். இதையடுத்து அந்த வீடியோவை அந்த சிறுமியிடம் காட்சி தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வீடியோவை சோசியல் மீடியாவில் ரிலீஸ் செய்து விடுவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

5 நாட்களாக பலாத்காரம்
இதே போன்று தொடர்ந்து அந்த சிறுமியை 5 நாட்களாக மிரட்டி வன்கொடுமை செய்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி ,காலித்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்துதான் இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து தபரூக் கைது செய்யப்பட்டார். மேலும் காலித்திற்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் இரண்டாவதாக திருமணம் செய்து அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார்.

இருவர் கைது
14 வயது சிறுமியிடம் காதல் என்ற பெயரில் அவரது வாழ்க்கையை சீரழித்த "கணவர்" காலித்தையும் போலீஸார் கைது செய்தனர். தபரூக் மற்றும் காலித் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர். அந்த சிறுமிக்கு அறிவுரைகளை கூறி காப்பகத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.14 வயது சிறுமியை திருமணம் செய்தது சட்டப்படி தவறானது. ஆனால் இது காவல்துறைக்கு தெரியாமல் இருந்து வந்துள்ளது. இப்போது சிறுமியை நண்பன் வீடியோ எடுத்ததை போலீசில் சொல்லப்போனதால் சிறுமியின் "கணவரும்" போலீசில் சிக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications