சென்னை மேடவாக்கம் டாஸ்மாக்கில் குரங்கிடம் சேட்டை..  போதையில் கொய்யா ஊட்டியவருக்கு நடந்ததை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார். பின்னர் ஒயின் ஷாப் அருகே இருந்த குரங்கு ஒன்றியிடம் ஆசையாக கொய்யாக்காவை ஊட்டி உள்ளார். அப்போது அமைதியாக இருந்த குரங்கு கோபப்பட்டது. சட்டென பாய்ந்த அந்த குரங்கு அவரை கடித்து குதறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகிறது.

சென்னையில் நன்மங்கலம் வனப்பகுதியை ஒட்டித்தான் மேடவாக்கம் அமைந்துள்ளது. மொத்தப் பரப்பளவு சுமார் 2,400 ஹெக்டேர் ஆகும். இதில் 320 ஹெக்டேர் தமிழ்நாடு வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இங்கு 85-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கின்றன. இந்தியப் பெரிய கொம்பு ஆந்தை என்ற அரிய வகை ஆந்தை நன்மங்கலம் வனப்பகுதியில் இருக்கிறது. குள்ளநரி, கீரிப்பிள்ளை, பாம்பு, தவளை, உடும்பு, மற்றும் குரங்குகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன.

chennai the monkey bit the hand of the drunkard who fed him guava in Medavakkam TASMAC

இதில் குரங்குகள் இயல்பாகவே மேடவாக்கம் பகுதிக்கு வந்து உணவு தேடுகின்றன. மனிதர்கள் சாப்பிட்டு போடும் உணவுகள், வாழைப்பழம், பழங்கள் மற்றும் உணவுகளை தேடி தேடி உண்ணுகின்றன. இந்த குரங்குள் பொதுவாக தனக்கு பிடித்த பொருள் இருந்தால் பறித்து செல்லவும் தயங்காது. தனக்கு ஆபத்து என்று தெரிந்தால் தாக்கவும் செய்யவும். குரங்குகள் இயல்பாகவே மனிதனை தாக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை.

அதேநேரம் மனிதர்கள் உணவளிப்பதால், குரங்குகள், மனிதன் மீதான பயத்தை இழந்துவிட்டன. மனிதர்களின் உணவுகள் சுலபமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் அவற்றை பெறுவதற்காக காத்திருக்கின்றன. அப்படி காத்திருக்கும் போது, எரிச்சலூட்டும் விஷயம் நடந்தால் கடித்து வைத்துவிடும். அப்படித்தான் மேடவாக்கத்தில் நடந்துள்ளது.

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார். பின்னர் ஒயின் ஷாப் அருகே இருந்த குரங்கு ஒன்றியிடம் ஆசையாக கொய்யாக்காவை ஊட்டி உள்ளார். அப்போது அமைதியாக இருந்த குரங்கு கோபப்பட்டது. சட்டென பாய்ந்த அந்த குரங்கு அவரை கடித்து குதறியுள்ளது.

அப்போது உடன் இருந்த ஒரு நபர் கடித்து விடும் என எச்சரித்தும் கேட்காமல்இ அந்த நபர் வலுக்கட்டாயமாக குரங்கிற்கு கொய்யாக்காவை ஊட்டியிருந்தார். அதனால் கோபப்பட்ட குரங்கு அவரை கடித்து குதறிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+