தொழிலதிபர் கடத்தல் வழக்கு... 7 மாதமாக தலைமறைவான மாஜி இன்ஸ்பெக்டர் கைது.. சிபிசிஐடி அதிரடி!
சென்னை: சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபர் சரவணன் கடத்தப்பட்ட வழக்கில், 7 மாதமாக தலைமறைவாக இருந்த காவல்துறை முன்னாள் ஆய்வாளர் சரவணன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் 10 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் காவலர்கள் அனைவரும் தலைமறைவாகினர். பின்னர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா மற்றும் சங்கர் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொழிலதிபரை கடத்திய வழக்கில் தேடப்பட்டு வரும் 6 பேரையும் இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.இந்தநிலையில் காவல்துறை முன்னாள் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 7 மாதங்களாக தலைமுறைவாக இருந்த சரவணன், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை காவல் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை அனுமதி வழங்கப்பட்டது.
இதுவரை இந்த வழக்கில் உதவி ஆணைய ர் சிவகுமார், முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிபிசிஐடி போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications