நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
சென்னை: சென்னை திருவொற்றியூர் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலை செய்யும்r ஏழுமலை என்பவர் தனக்கு கீழ் உள்ள பணியாளர் பயன்படுத்த வேண்டிய அரசு வாகனத்தை வழங்காமல் வாகனத்தில் பீர் அருந்தியபடி அலட்சியமாக பதில் அளித்த வீடியோ வெளியாகியது.இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவெற்றியூரில் மின்வாரிய அலுவலகம் செயல்படுகிறது. இங்கு லைன் இன்ஸ்பெக்டராக ஏழுமலை என்பவர் வேலை செய்து வருவததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மின்வாரிய அலுவலர் ஏழுமலை, மின்வாரியத்திற்கு சொந்த ஜீப் வாகனத்தில் அமர்ந்த படி பீர் குடித்துக்கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்த உதவியாளர் ஒருவர் இப்படி செய்வது சரியா என்ற கேள்வி கேட்டுள்ளார். ஆனால் தனக்கு கீழ் உள்ள பணியாளர் பயன்படுத்த வேண்டிய அரசு வாகனத்தை வழங்காமல் வாகனத்தில் மது அருந்தியபடி அலட்சியமாக பதில் அளித்ததாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் மின்வாரிய அலுவலர், நீ ஹெல்ப்பர் தான, நீயெல்லாம் கேள்வி கேட்க கூடாது என்று பீட் குடித்தவாரே அலட்சியமாக பதில் அளிப்பதாக உள்ளது. இன்று காலை முதலே இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர், அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகளை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்து வந்தார்கள்.

சென்னை திருவொற்றியூர் மின்வாரியத்தில் பணியாற்றும் அந்த குறிப்பிட்ட மின் ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மின் வாரிய ஊரியர்கள் மற்றம் அரசு ஊழியர்களுக்கு போதிய அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனிடையே இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், உயர் அதிகாரிகளை . அவர்களின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் கேள்வி கேட்க கூடாது என்று சட்டம் இல்லை... இது போன்ற நிலை மாற வேண்டும் என்றால். அனைத்து பணியாளர்களுக்கும்.. தவறு நடந்தால் அதனை முதல்வருக்கு தெரிவிக்கும் வகையில். வழிவகை செய்ய வேண்டும். குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
பணி நேரத்தில் மது அருந்தும் இவர் - திருவொற்றியூர் மின்வாரிய Line inspector ஏழுமலை.
— Dr.Karthik Kuppan - Say No To Drugs & DMK (@kuppan_karthik) March 27, 2024
தனக்கு கீழ் உள்ள பணியாளர் பயன்படுத்த வேண்டிய அரசு வாகனத்தை வழங்காமல் வாகனத்தில் மது அருந்தியபடி பதில் அளிக்கும் அலட்சியம்.@RAKRI1 @chennaicorp @mkstalin @PriyarajanDMK pic.twitter.com/W9FZC7YEYs
இதேபோல் இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், தயவு செய்து அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள். அவரை இடைநீக்கம் செய்யுங்கள், அவருடைய இடத்தை நிரப்ப நிறைய பேர் இருக்கிறார்கள், இவரின் தண்டனை மற்ற அரசு ஊழியர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவர்களின் பதிவிற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் குறிப்பிட்ட மின்வாரிய அதிகாரி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பதில் அளித்துள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications