தமிழ்நாட்டில் டேட்டா ஹப்.. சென்னையில் ரூ.1,000 கோடி முதலீட்டில் வரும் பிரமாண்டம்!
சென்னை: உலகளாவிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன், சென்னையில் ரூ.1,000 கோடி மதிப்பில் பிரமாண்டமான டேட்டா சென்ட்டர்களை அமைக்க திட்டமிட்டிருக்கிறது.
சென்னை அம்பத்தூரில் ஒரு மாபெரும் 'ஹைப்பர்ஸ்கேல்' டிஜிட்டல் உள்கட்டமைப்பு மையத்தை உருவாக்க பிளாக்ஸ்டோன் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான முதலீடு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக பிளாக்ஸ்டோனின் 'லுமினா கிளவுட் இன்ஃப்ரா' நிறுவனம், அம்பத்தூரில் 16 ஏக்கர் நிலத்தை ரூ.500 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த மையத்தின் ஆரம்பக்கட்ட மின் திறன் 216 மெகாவாட் ஆக இருக்கும்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பிளாக்ஸ்டோன் நிறுவனம், பெங்களூரைச் சேர்ந்த பேரி குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. பேரி குழுமம் ஏற்கனவே NTT போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்குத் தரவு மையங்களை அமைத்துக் கொடுத்த அனுபவம் வாய்ந்தது. இவர்கள் 'வடிவமைப்பு-கட்டமைப்பு-வழங்குதல்' என்ற முறையில் இந்த மையத்தை உருவாக்கித் தருவார்கள்.
சென்னை ஏன் தேர்வு செய்யப்பட்டது?
சர்வதேச தரவு போக்குவரத்தை இணைக்கும் கடலடி கேபிள்கள் சென்னையில் நிலத்தை வந்தடைவதால், குறைந்த தாமதத்தில் இணையச் சேவையை வழங்க முடியும். எனவேதான் சென்னை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
அம்பத்தூர் பகுதி ஏற்கனவே தரவு மையங்களுக்கான ஒரு மையப்புள்ளியாக வளர்ந்து வருகிறது. இங்கு தடையில்லா மின்சாரம் மற்றும் பிற வசதிகள் சிறப்பாக உள்ளன.
பிளாக்ஸ்டோனின் இந்திய வளர்ச்சி:
இந்த முதலீட்டின் மூலம், பிளாக்ஸ்டோன் இந்தியாவில் 700 மெகாவாட்டிற்கும் அதிகமான தரவு சேமிப்புத் திறன் கொண்ட மிகப்பெரிய உரிமையாளர்களில் ஒருவராக மாறும். இந்நிறுவனம் ஏற்கனவே நவி மும்பை மற்றும் ஹைதராபாத்திலும் இது போன்ற மையங்களை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications