சென்னையில் 493 இடங்களில்.. முளைக்க போகும் சிவப்பு போர்ட்.. அந்த பக்கம் போகாதீங்க.. ரொம்ப முக்கியம்!
சென்னை: சென்னையில் உள்ள சாலைகளை vending zones மற்றும் non vending zones என்று பிரிக்க உள்ளனர். அதாவது தள்ளு வண்டிகளை அமைக்க அனுமதிக்கப்பட்ட இடம்.. தள்ளு வண்டிகளை அமைக்க அனுமதிக்கப்படாத இடம் என்று மாற்ற உள்ளனர்.
இதற்காக சென்னை மாநகராட்சி, நகரின் 15 மண்டலங்களில் 776 விற்பனை மண்டலங்களின் பட்டியலை இறுதி செய்ய உள்ளது. சென்னை மாநகராட்சி 493 தெருக்களை விற்பனை இல்லாத பகுதிகளாக அறிவித்து பெயர் பலகைகளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட மாநகராட்சி குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் 776 தெருக்களில் தெருவோர வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள். 493 தெருக்களில் உள்ள தெருவோர கடைகளை அகற்றும் பணி தொடங்கும். விற்பனை அல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அகற்றப்படும்.
ராயபுரம் மண்டலத்தில் அதிக விற்பனை மண்டலங்கள்: ராயபுரம் மண்டலம் அதிக எண்ணிக்கையிலான விற்பனை மண்டலங்களைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இங்கே 162 தெருக்கள் குழுவின் ஒப்புதலுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தெருக்களில் கடைகள் அமைக்கப்பட்டும். அடுத்தடுத்தாக 109 தெருக்களில் விற்பனைகள் அனுமதிக்கப்படும்.
வளசரவாக்கத்தில் 90 விற்பனை மண்டலங்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் குறைந்தது 74 விற்பனை மண்டலங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி 493 தெருக்களை விற்பனை இல்லாத பகுதிகளாக அறிவித்து பெயர் பலகைகளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் பச்சை நிறத்திலும்.. அனுமதிக்கப்படாத இடங்களில் சிவப்பு நிறத்திலும் போர்ட் வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதிரடி நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் வந்த சில நாட்களில் சென்னையில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக சென்னையை அழகாக மாற்றுவதற்கான தீவிரமான பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.
ஏற்கனவே ரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) அதன் அனைத்து மண்டலங்களிலும் மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்து உள்ளது. இரவு நேரங்களில் மிக தீவிரமாக மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது போக மாநகராட்சியின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறை உதவியுடன் அறிவுறுத்தல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் மூலம் சாலை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்படும்.
மேலும் கைவிடப்பட்ட வாகனங்களை பெருமளவில் சுத்தம் செய்து அகற்றும் என ஆணையர் ஜே. குமரகுருபரன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜூலை 22ம் தேதி பைலட் திட்டமாக சென்னையில் 3 மண்டலங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. ஜூலை 29.. அதாவது இன்று இரவு முதல் சென்னையின் அனைத்து பக்கங்களிலும் இந்த மாற்றங்களை செய்ய உள்ளனர். சென்னையில் கைவிடப்பட்ட வாகனங்களை நீக்க முடிவு செய்துள்ளனர். செப்டம்பரில் பருவமழை தொடங்குவதற்கு முன் மற்றொரு சுற்று வெகுஜன சுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோதனை: முன்னதாக, அண்ணாநகர், ராயபுரம், அடையாறு உள்ளிட்ட பல மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் உள்ள பல்வேறு மீட்பு மையங்கள் மற்றும் சமையலறைகளை ஆணையர் ஆய்வு செய்தார். இந்த மையங்களில் மின்சாரம், குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, கழிப்பறைகள், ஜெனரேட்டர்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் ஆனையிறவுப் பாலம் (39.73 கோடி மதிப்பில்), கணேசபுரத்தில் ரயில்வே மேம்பாலம் (₹226.5 கோடி), போஜராஜா நகர் லெவல் கிராசிங் (₹30.13 கோடி) உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications