சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்! எங்கெல்லாம் நின்றுச் செல்லும் தெரியுமா?
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று முதல் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்குகிறது.
சூப்பர் பாஸ்ட், விரைவு ரயில், அதி விரைவு ரயில் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது வந்தே பாரத். இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.

இந்த ரயிலில் டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் இந்த ரயிலை மக்கள் விரும்புகிறார்கள். இந்த ரயில்கள் 2018 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 49 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் 40 க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூர், விஜயவாடா மற்றும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, திருவனந்தபுரம்- காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தவிர சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதையடுத்து சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த ரயிலானது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமைகளில் அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவிலை அதே நாள் மதியம் 2.10 மணிக்கு அடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு அதே நாள் இரவு 11.45 மணிக்கு வந்தடையும். இனி வரும் 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயங்கும்.
இந்த ரயிலில் 7 சேர் கார் பெட்டிகளும் ஒரு எக்ஸிகூட்டிவ் சேர் கார் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி , மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய இடங்களில் நின்று செல்லும். இது வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்னை எழும்பூர்- நெல்லை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் நீடிப்பாக இயக்குவதா இல்லை தனிச் சிறப்பு ரயிலாக இயக்குவதா என்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications