சென்னை டூ உளுந்தூர்பேட்டை.. சொல்லி வைத்தார் போல் பிரம்ம முகூர்த்தத்தில் கிளம்பிய மக்கள்.. சிக்கல்
சென்னை: தீபாளிக்கு என்ன தாண்டி போயிருவியா நீ.. என்பதுபோல் முறைத்துக் கொண்டு நிற்கிறது சென்னை திருச்சி நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலை.. பெருங்களத்தூர் தொடங்கி செங்கல்பட்டு வரை டிராபிக் ஜாமில் மாட்டக்கூடாது என்று.. பிளான் பண்ணி எஸ்கேப் ஆக தேர்ந்தெடுத்த நேரத்தில்.. தீயைத்தான் வைக்க வேண்டும்.. அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல் அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்கு கிளம்பி இருப்பார்கள் போலே,, காலை 8 மணிக்கு உளுந்தூர்பேட்டை அதன் கோரமுகத்தை காட்டியிருக்கிறது. அதை பாருங்கள்.
சென்னையில் இருந்து சாதாரண நாட்களிலேயே திருச்சி சாலையில் போவது ஈஸியல்ல.. இப்படியான சூழலில் தீபாவளி பண்டிகையின் போது சொல்லவா வேண்டும்.. அத்தனை வாகனங்களும் ஒரே நேரத்தில் சென்னையை விட்டு வெளியேறின. நேற்று யாரெல்லாம் சென்னை கிழக்கு கடற்கரைசாலை வழியாக திருப்போரூரை கடந்து சென்றிருந்தாலோ அல்லது ஓஎம்ஆர் சாலை வழியாக திருப்போரூரை கடந்து சென்று இருந்தாலோ ஓரளவு தப்பி இருப்பார்கள்.

பெரும்பாலானோர் செங்கல்பட்டு வழியாகவே சென்றதால்.. ரோடு சுத்தமாக தாங்கவில்லை.. சினிமா படத்தில் கார் ரேஸ் வருவது போல் அத்தனை வாகனங்களும் புயலாய் புறப்பட்டன. அப்படி புறப்பட்ட வாகனங்கள் பெருங்களத்தூரை கடந்து சென்றாலும், செங்கல்பட்டை தாண்டுவதற்குள் நொந்து போனார்கள்... அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
செங்கல்பட்டை கடந்து சென்றால் எளிதாக இருந்தது என்று நினைக்கிறீர்களா.. அதுதான் இல்லை.. அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டே இருந்த காரணத்தால், உளுந்தூர்பேட்டை வரை நெரிசல் அதிகமாகவே இருந்தது. இதுபற்றி பலரும் தங்கள் அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டபடி உள்ளார்கள்.
அதேநேரம் சிலர் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தார்கள். இரவில் சொந்த ஊருக்கு புறப்படாமல், அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை புறப்பட்டுள்ளார்கள்.. சொல்லி வைத்தார் போல் பல ஆயிரம் பேர் அப்படி சென்றதால், சென்னை திருச்சி சாலை அப்போதுமே நெரிசலில் தான் சிக்கியது.. பிளான் பண்ணி எஸ்கேப் ஆக நினைத்தவர்களையும் நெரிசல் விட்டுவைக்கவில்லை..
இதுபற்றி அருள் முருகன் என்பவர் வெளியிட்ட பதிவினை பார்ப்போம். "சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு கார்கள் செல்வதால் தமிழகத்தின் மிக முக்கியமான சாலையில் (சென்னை திருச்சி சாலை) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உளுந்தர்பேட்டையில் காலையிலேயே மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நான் புதுச்சேரி வழியாக விழுப்புரம் சென்றடைந்த காரணத்தால், பயணத்தின் பெரும் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்துவிட்டேன்.. ஆனால் அதற்கு பின்பான சாலையில் உளுந்தூர்பேட்டையை நோக்கி பயணித்த போது, காலை 8.00 மணியளவிலேயே நான் நினைத்து பார்க்காத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் இருந்தது.
Extremely Heavy Traffic on Heart line road of Tamil Nadu due to Deepavali festival cars heading to various districts in TN from Chennai.
— Arul Murugan (@arulmuru182002) October 30, 2024
Traffic at Ulunderpet, 200KM away from Chennai.
I took Pondicherry route to reach Villupuram and skipped this mess for major portion! pic.twitter.com/QImxySOTuW
பல கார்கள் சென்னையில் இருந்து அதிகாலை 03.30 முதல் 04.30 மணி வரை புறப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது பைத்தியக்காரத்தனம்.. எப்படியோ நான் பாண்டிச்சேரி ரூட்டில் விழுப்புரம் வரை வந்ததால் நெரிசலை தப்பித்தேன். அனைத்து உணவகங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி என தெற்கே செல்லும் வாகனங்களும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என மேற்கு நோக்கி செல்லும் வாகனஙகளும் உளுந்தூர்பேட்டை வரை ஒன்றாகவே செல்லும் என்பதால் நெரிசல் மிகமிக அதிகமாக இருக்கிறது. சென்னையின் 90 சதவீத மக்கள் ஜிஎஸ்டிசாலை வழியாகவே வெளியேற வேண்டிய நிலை இருக்கிறது. புதிய வழித்தடங்கள் மற்றும் 8வழிச்சாலைகளாக திருச்சி சாலையை மேம்படுத்தினால் தான் நெரிசலை ஓரளவு குறைக்க முடியும்.. இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய இயலாது என்பது கசப்பான உண்மை.












Click it and Unblock the Notifications