சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

200 வருடங்களில் சூப்பர் ரெக்கார்ட்.. சென்னை தொட்ட இன்னொரு மைல்கல்.. வெதர்மேன் தந்த செம டேட்டா!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சிட்டியில் இந்த வருடம் மட்டும் 2259 மிமீ மழை பெய்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    Chennai-யில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை..காரணம் என்ன? | Oneindia Tamil

    நேற்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 12 மணி வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடாமல் மழை பெய்தது. நேற்று மட்டும் பல இடங்களில் சென்னையில் நேற்று 200 மிமீக்கும் அதிகமாக மழை பதிவானது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்று தீவிர கனமழை பெய்தது. கணிப்புகளை பொய்யாக்கி எதிர்பார்ப்புகளை விட அதிக அளவு மழை நேற்று சென்னையில் பெய்துள்ளது.

    Exclusive: நேற்று பெய்தது போலவே இன்றும் சென்னையில் பேய்மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன பதில் Exclusive: நேற்று பெய்தது போலவே இன்றும் சென்னையில் பேய்மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன பதில்

     சென்னை மழை

    சென்னை மழை

    இந்த நிலையில் சென்னையில் பெய்த மழை அளவு பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இந்த வருடம் முழுக்கவே மிக அதிக கனமழை பெய்துள்ளது. முக்கியமாக அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான வடகிழக்கு பருவமழை அளவில் சென்னை சிட்டி இந்த முறை புதிய ரெக்கார்ட் படைத்துள்ளது. கடந்த 200 வருடங்களில் அதிக வடகிழக்கு பருவமழை பெய்த ஆண்டுகளின் பட்டியலில் 2021வது வருடம் 6வது இடத்தை பிடித்துள்ளது.

    தமிழ்நாடு வெதர்மேன்

    தமிழ்நாடு வெதர்மேன்

    கடந்த 200 வருடங்களில் அதிகபட்சமாக 2005 ஆம் ஆண்டில்தான் அதிக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக 2015ல் அதிக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்து 1888ம் ஆண்டில் அதிக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. 1946, 1997 ஆகிய வருடங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்து 2021ம் ஆண்டு 6வது இடத்தை பிடித்துள்ளது.

    தமிழ்நாடு வெதர்மேன் மழை

    தமிழ்நாடு வெதர்மேன் மழை

    2005 வடகிழக்கு பருவமழையின் போது சென்னை சிட்டியில் 2108 மிமீ மழை பெய்துள்ளது. 2021ல் சென்னை சிட்டியில் வடகிழக்கு பருவமழையின் போது 1485 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 200 வருடங்களில் மொத்தமாக வருடாந்திர மழை அளவை கணக்கிட்டால் 2021ம் ஆண்டு 3வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை தமிழ்நாடு வெதர்மேன்

    சென்னை தமிழ்நாடு வெதர்மேன்

    அதன்படி 2005ல் சென்னையில் சிட்டியில் மொத்தமாக 2566 மிமீ மழை பெய்துள்ளது. 1996ம் ஆண்டு 2451 மிமீ மழையோடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்த வருடம் முழுக்க சென்னை சிட்டியில் 2259 மிமீ மழை பெய்துள்ளது. 1943, 2015, 1847, 1997 ஆகிய வருடங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்து உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Chennai touches new feet in 200 years on rain fall data says Tamilnadu Weatherman report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X