U டர்ன் போடுங்க.. ஓஎம்ஆர் ரோட்டில் டிராபிக்கில் எல்லாமே மாறுது! சென்னை வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு
சென்னை: சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.. டிராபிக் சிக்கலை தீர்க்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், நெரிசலை முழுமையாக குறைக்க முடிவதில்லை.

எனவேதான், வாகன நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.. மற்றொரு பக்கம் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பணிகளாலும், போக்குவரத்து நெரிசல் மேலும் கடினமாகிவிடுகிறது.
திடீர் மாற்றம்:
அதிலும், மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏராளமான ஐடி கம்பெனிகள் உள்ளதால், ஓஎம்ஆர் ரோட்டில் இரவும், பகலும் டிராபிக் இருந்தவாறே உள்ளது.. இந்த மத்திய கைலாஷ் சந்திப்பிலும் மேம்பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. சென்னை கோட்டூர்புரம், மத்திய கைலாஷ் சந்திப்பு, ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், இந்த பணிகளை முன்னிறுத்தி, நேற்று அதாவது டிசம்பர் 22 முதல் சோதனை ஓட்டம் அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், "கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
யூ-டர்ன்:
இப்பிரச்சனைக்கு தீர்வாக சோதனை ஓட்டம் அடிப்படையில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும். அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் ஓ.எம்.ஆர் சாலை நோக்கி திருப்பி விடப்படும்.
அந்த வாகனங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி சி.பி.டி பாலிடெக்னிக் கல்லூரியின் முன்புறம் 'U' திருப்பம் அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும். கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தற்போது போலவே எந்த மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.
ஓஎம்ஆர் ரோடு:
ஓ.எம்.ஆர்-ல் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயிலின் பின்புறத்தில் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கப்படும். இந்த போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு, சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications