சென்னையில் 300 டிராபிக் சிக்னல்கள்.. இனி எல்லாம் மாறுமே.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: நவீன தொழில்நுட்பம் மூலம் சென்னையின் அனைத்து சிக்னல்களும் கண்காணிக்கப்பட்டு, வாகன நகர்வுகள் தொடர்பான புள்ளிவிவரம் சேகரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னை போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார்கள்.
சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதில் முக்கியமான நடவடிக்கை என்றால், எல்லா சிக்னலையும் கேமராவில் இணைத்து, கூகுள் மேப் உதவியுடன் வாகனங்களை கண்காணிக்க போகிறார்கள். இப்படி செய்தாவது எந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ, அந்த பகுதியில் அதற்கு தகுந்தாற் போல் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளார்கள்

சென்னை மாநகரம் கடந்த இருபது வருடங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு விரைவடைந்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளார்கள். மழைநீர் வடிகால்வாய், மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் போன்ற பணிகள் சென்னை முழுவதும் தீவிரமாக நடந்து வருகின்றன.
மெட்ரோ வழித்தடம் 2கம் கட்ட பணிகள் சென்னையின் மையப்பகுதிகள் முழுவதும் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இதனால் வழக்கமான வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சூழலில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு புதிய யுக்திகளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சிக்னல்ளை அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கிறார்கள். அந்த சிக்னல்களில் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் சிக்னல்களைக் கடக்கின்றன? எத்தனை வாகனங்கள் சிக்னல்களில் காத்திருக்கின்றன? எவ்வளவு நேரம் காத்திருக்கின்றன? எந்த மாதிரியான வாகனங்கள் கடக்கின்றன என்ற விவரம் சிக்னல் வாரியாக சேகரிக்கப்படுகிறது.
அத்துடன் எந்த நேரம் எப்படி போக்குவரத்துக்கள் உள்ளன என்பது கண்காணிக்கப்படுகிறது. இதற்காக ரூ.1 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி பயன்படுத்தப்படுகிறது அக்கருவி, கூகுள் மேப்புடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால், தகவல்கள் விரைவாகவும் துல்லியமாகவும் சேகரிக்கப்படுகின்றன.
இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் போக்குவரத்து போலீஸார் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். சென்னையில் முக்கிய கல்வி நிறுவனங்கள், வாகனங்கள் சாலை சந்திப்புகள் போன்ற போக்குவரத்து போலீஸார், வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சாலை சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக பல மாற்றங்களுக்கான திட்டங்களை நெடுஞ்சாலைத் துறையின் நிபுணர் குழுக்களுடன் இணைந்து, வரையறுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படியே நவீன தொழில்நுட்பம் மூலம் அனைத்து சிக்னல்களும் கண்காணிக்கப்பட்டு, வாகன நகர்வுகள் தொடர்பான புள்ளிவிவரம் சேகரித்து போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதாம். சென்னையில் போக்குவரத்து நெருக்கம் தற்போதைய நிலையில் மிக அதிகமாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக உள்ள பகுதிகள் என்றால், அது ஓஎம்ஆர் சாலை, போரூர் டூ கோடம்பாக்கம் சாலைகள் தான்.
அதேநேரம் மெட்ரோ பணிகள் நடக்காத பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. ஆலந்தூர் தொடங்கி தாம்பரம் வரையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.குறிப்பாக பல்லாவரம் தொடங்கி குரோம்பேட்டை முடியும் வரை நெரிசல் மிக அதிகம். இதேபோல் பள்ளிக்கரணை, மேடவாக்கம், ரேடியல் சாலையிலும் மிக அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே சென்னையை போல் தாம்பரம் பகுதியிலும் போக்குவரத்து நெரிசலுக்கு நல்ல தீர்வினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications