Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஞ்சப்பையில் லஞ்சம்.. சென்னை வேப்பேரி அசிங்கம்.. எங்காவது போயிடுங்க.. "வாக்கி டாக்கி" தந்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை வேப்பேரியில் நடந்த சம்பவம் ஒன்று கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் வீடியோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது.. போக்குவரத்து போலீசார் 3 பேர் லஞ்சம் வாங்கிய அந்த வீடியோ பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும் தந்து வருகிறது.

சென்னை வேப்பேரியில் நடந்த சம்பவம் ஒன்று கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் வீடியோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது.. போக்குவரத்து போலீசார் 3 பேர் லஞ்சம் வாங்கிய அந்த வீடியோ பொதுமக்களுக்கு அதிர்ச்சியையு தந்து வருகிறது.

chennai Chennai Traffic Police walkie talkie

வீடியோ: அந்த வீடியோவில், பைக் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களிடம், அபராதம் விதிக்காமல், அருகில் நிறுத்தி வைத்துள்ள பைக்கில் தொங்க விடப்பட்ட மஞ்ச பையில், லஞ்ச பணத்தை போட்டு விட்டு போகுமாறு போக்குவரத்து போலீஸார் சொல்கிறார்கள்.. உடனே, உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளும், அந்த லஞ்ச பணத்தை மஞ்சள் பையில் போட்டுவிட்டு செல்கிறார்கள். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது..

அதாவது, அந்த பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகளிடம் ஆர்சி புக் இல்லை என்றால் அதற்கு ஒரு தொகையும், லைசென்ஸ் இல்லையென்றால் அதற்கு ஒரு தொகையும் என தனித்தனியாக லஞ்சம் வாங்குகிறார்களாம்.

மஞ்சப்பை: இதையடுத்து, வேப்பேரியில் மஞ்சப்பையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் உள்பட 3 பேருமே அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் வாக்கி டாக்கியில் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்... அந்த எச்சரிக்கையில், "வாகன சோதனையின் போது போலீஸார் பணம் வாங்கிக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.. வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸார் மீது புகார்கள் வந்தால் அவர்களை சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

டிரான்ஸ்பர்: போக்குவரத்து பிரிவில் பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் போலீஸ்காரர்கள் தயவு செய்து, டிராபிக்கில் இருந்து வேறு இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு சென்றுவிடுங்கள்..

டிராபிக் போலீஸ் மரியாதையை அதிகரிப்பதற்காக, நாங்கள் எவ்வளவோ செய்கிறோம்.. நாங்கள் ஒரு படி மேலே கொண்டு சென்றாலும், நீங்கள் 4 படி கீழே இறக்கிவிட்டுடறீங்க.. நீங்கள் ஒருத்தர் செய்யும் தவறுகளால், ஒட்டுமொத்த போக்குவரத்து துறைக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது.. அதுவும் ஒரு சில செய்திகளை பார்க்கும்போது, ரொம்ப அசிங்கமா இருக்கு..

தவறுகள்: இது போன்ற தவறுகள் நடக்கும் பட்சத்தில் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அப்படி நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.. இது அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் பொருந்தும்" என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+