சென்னையில் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம்! குமரகுருபரன் ஐஏஎஸ் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் சென்னையில் டோக்கன் பெற்றவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் குமரகுருபரன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 4.71 கோடிக்கு மேல் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் பதிவானது.

மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது. உடனே வாக்குச் சாவடியின் கதவுகள் மூடப்பட்டன. இதனால் வாக்குச் சாவடிக்குள் 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கலாம்.
மற்ற இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அவை ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்படும்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் எண்ணப்படும். இந்த நிலையில் சென்னையில் டோக்கன் பெற்றவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் குமரகுருபரன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மக்கள் பேருந்துகள், ரயில்களில் பயணித்திருந்த நிலையில் பலருக்கு பேருந்து கிடைக்காமல் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்றும் பேருந்து கிடைக்காதவர்களுக்கு உடனே பேருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தவெக தலைவர் விஜய், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும் வாக்குப் பதிவு நேரம் நீட்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications