"சத்தியமா உன்னைதான் மேரேஜ் செய்துப்பேன்!" தனிமையில் சத்யம் செய்த ரிஷி! இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
சென்னை: சென்னையில் காதல் வலையில் இளம்பெண்ணை விழ வைத்துவிட்டு அவருடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்த இளைஞர், தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷி ஜோதிகுமார் (30). நீலாங்கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாலவாக்கத்தில் உள்ள ஸ்கேன் மையத்தில் பணியாற்றி வரும் 29 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் இருவரும் தனிமையில் பல இடங்களுக்கு சுற்றியதாக தெரிகிறது. அப்போதெல்லாம் திருமண ஆசை காட்டிய ரிஷி, அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அந்த பெண் கர்ப்பமானார். பின்னர் ரிஷியின் அறிவுறுத்தலின்படி கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு கலைத்துக் கொண்டதாக தெரிகிறது. அதன் பிறகு ரிஷி, அந்த பெண்ணுடன் செல்போனில் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக் கொண்டார்.
இதையடுத்து அந்த பெண், ரிஷியை தேடிச் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு, ரிஷி மறுத்துவிட்டாராம். மேலும் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தன்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்து, வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட ரிஷி மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியபோது இளம்பெண் சொல்வது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ரிஷி ஜோதிகுமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது போல் மற்றொரு சம்பவம் மும்பையில் நடந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் பெண் மருத்துவருடன் இளைஞர் நெருங்கி பழகினாராம். இந்த நிலையில் அந்த பெண்ணுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளார்.
அப்போது இருவரும் தனிமையில் காதலை வளர்த்தனர். அப்போது சில புகைப்படங்களை அந்த இளைஞர் எடுத்து வைத்துக் கொண்டாராம். இதனால் கர்ப்பம் அடைந்தார் அந்த மருத்துவர். பின்னர் விஷயத்தை அந்த இளைஞரிடம் சொன்ன போது, அவர் கர்ப்பத்தை கலைக்க சொன்னார்.
ஆனால் அந்த பெண் மருத்துவர் மறுத்தாராம். இதனால் தனிமையில் இருந்த போது எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டியதை அடுத்து அந்த பெண்ணும் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் மருத்துவருடன் அந்த இளைஞர் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவர் விசாரித்ததில் அந்த நபருக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து போலீஸ் நிலையம் சென்ற அந்த பெண் மருத்துவர், அந்த இளைஞர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications