ஆறு மண்டலங்களில் கிடுகிடு.. அதிர வைக்கும் சென்னை பாதிப்பு.. வெளியானது லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 2324 பேரும், கோடம்பாக்கத்தில் 1646 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மண்டல வாரியான கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்ட பட்டியலில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது என தெரியவந்துள்ளது.

chennai zone wise breakup of covid 19 positive cases as on 29 th may

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில். சென்னையில் நேற்று ஒரு நாளில்மட்டும் 559 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் சென்னையில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12762 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6330 பேர் குணம் அடைந்துவிட்டனர். 102 பேர் உயிரிழந்துள்ளனர். 6229 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மற்றும் குணம் அடைந்தவர்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு விவரம்

திருவெற்றியூர்: 377

மணலி: 175

மாதவரம் 280

தண்டையார் பேட்டை 1322

இராயபுரம் 2324

திரு.வி.க.நகர் 1393

அம்பத்தூர் 516

அண்ணா நகர் 1089

தேனாம்பேட்டை 1412

கோடம்பாக்கம் 1646

வளசரவாக்கம் 794

ஆலந்தூர் 178

அடையாறு 719

பெருங்குடி 217

சோழிங்கநல்லூர் 219

பிறமாவட்டங்களுக்க மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 101

மொத்தம்: 12762

சென்னையில் எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம், எத்தனை பேர் தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளார்கள், மரணம் அடைந்தவர்கள் விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+