Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் 4வது ரயில் முனையம்.. சென்ட்ரலுக்கு மாற்றாக வில்லிவாக்கம்.. நடக்க போகும் 2 மேஜர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து வில்லிவாக்கத்தில் 4-வது ரயில் முனையம் உருவாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக அதனை ஒட்டியுள்ள பெரம்பூர் கேரஜ் மற்றும் லோகோ ஒர்க்ஸ் இரண்டு பணிமனைகளை இடம் மாற்ற ரயில்வே திட்டமிட்டிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ள சென்னை, இன்னமும் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 20 வருடங்களில் சென்னையில் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலும், ஸ்ரீபெரும்புதூர் முதல் பூந்தமல்லி வரையிலும், திருவள்ளூர் முதல் ஆவடி வரையிலும், திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரையிலும் மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் உயரும் என தெரிகிறது.

Chennai s 4th Railway Terminal Do you know what the alternative to Central will look like in Villivakkam

அந்த பகுதிகள் எல்லாம் ஏற்கனவே நன்கு வளர்ந்த பகுதிகள் என்கிற போதிலும், மக்கள் நெருக்கம் சென்னையின் உள்பகுதி அளவிற்கு இல்லை.. விரைவில் அந்த பகுதிகளிலும் மக்கள் நெருக்கம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.. தற்போதைய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்த்தால் 2 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருக்கும். தினமும் 2 கோடி பேருக்கான பயணத் தேவையை பூர்த்தி செய்வது சவாலானது. சென்னையில் புறநகர் ரயில்கள் மட்டும் இல்லை என்றால், பெங்களூர் போல் தினசரி சிக்கி திணறும். தற்போதைய நிலையில் சென்னையில் ரயில் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போது சென்னைக்கு வருவோர் ரயிலில் வந்து இறங்க வேண்டும் என்றால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்கள் உள்ளன.

வடமாநிலங்கள் மற்றும் மேற்கு மாவட்ட ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகின்றன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி (தென்மாவட்டங்கள் வழியாக வரும் ரயில்கள்) ரயில்கள் எழும்பூருக்கு வந்து செல்கின்றன. இதில் எழும்பூர் ரயில் நிலையம் சிறியது என்பதால், அதிகப்படியான ரயில்களை நிறுத்தி வைக்க முடியாத நிலை இருந்தது. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது ரயில் முனையமாக மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டது, அதை கிட்டத்தட்ட தற்போது 3வது முனையாகவே மாற்றிவிட்டது.

இனி தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவித்தும்விட்டது ரயில்வே. தற்போது நாகர்கோவில் ரயில், அந்தோதியா ரயில், சில வடமாநில ரயில்கள், கோவை செல்லும் சில சிறப்பு ரயில்கள் தாம்பரம் வரை தான் வருகின்றன. தற்போது சென்னை எழும்பூர் கடற்கரை இடையே நான்காவது வழித்தடம் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு பிறகு தாம்பரம் ரயில் நிலையம் வழியாக மேலும் சில புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்த வசதி இருக்கும் நிலையில், மேற்கு மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் வந்து செல்லம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பக்கத்தில் தாம்பரம் போல் இடவசதி உள்ள ரயில் நிலையங்கள் இல்லை.. தற்போதைய நிலையில் சென்ட்ரலுக்கு அடுத்து உள்ள ரயில் நிலையமாக அரக்கோணம் 80 கிமீ தூரத்தில் இருக்கிறது. இதனால் சென்னையின் பெரம்பூரை ஒட்டிய பகுதியில் 4வது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே விரும்பியது.

தற்போது சென்னைக்குள் வரும் ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று தான் செல்கின்றன. ஆனால் போகும் போது பெரம்பூரில் நிற்காது. அங்கு பெரிய அளவில் இடவசதிகள் இல்லை. இதனால் அங்கு முனையம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லாத நிலையே இருந்தது. இந்நிலையில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி இடம் உள்ள காரணத்தால் அங்கு 4வது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது.

முன்னதாக சென்னை சென்ட்ரலில் நெரிசலைக் குறைக்க புதிய முனையம் அமைக்கும் யோசனை கடந்த 2008-ம் ஆண்டே முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இட நெருக்கடி மற்றும் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் காரணமாக நிறைவேறவில்லை. அதன்பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சால்ட் கோட்டர்ஸில் உள்ள இடத்தை பயன்படுத்த ஆய்வு நடந்தது. ஆனால் சாத்தியமே இல்லை என்பது தெரியவந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.


அதேநேரம் பெரம்பூர் பக்கத்தில் உள்ள வில்லிவாக்கத்தில் 4-வது ரயில் முனையம் அமைக்க ரயில்வே ஆய்வு செய்தது. இங்கு நல்ல இடவசதி உள்ளதால் ரயில்வே பச்சைக்கொடி காட்டியது. இதையடுத்த சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து வில்லிவாக்கத்தில் 4-வது ரயில் முனையம் உருவாவது உறுதியாகி உள்ளது.. வில்லிவாக்கம் ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும் என்றால் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரம்பூர் கேரஜ் மற்றும் லோகோ பணிமனைகளை படிப்படியாக இடம் மாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது.. வில்லிவாக்கத்தில் முனையம் அமைக்க ஐசிஎஃப் மற்றும் இரண்டு பணிமனைகளில் இருந்து நிலத்தை மாற்றுமாறு ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) மற்றும் மெக்கானிக்கல் துறைக்கு ரயில்வே கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


வில்லிவாக்கம் ரயில் முனையம் உருவானால், பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ரேணிகுண்டா வழியாக வட மாநிலங்கள் செல்லும் ரயில்களுக்கு சேவை வழங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+