"என் கடத்தல்காரர்கள்.." காலையில் ஷாக்! செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பரபர.. என்ன மேட்டர் பாருங்க
சென்னை: இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை ஏர்போர்ட்டில் சிலர் கடத்தியதாகப் பதிவிட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நமது நாட்டின் முக்கியமான செஸ் ஜாம்பவான் என்றால் அது விஸ்வநாதன் ஆனந்த் தான். அவரை பார்த்துத் தான் இன்று பல ஆயிரம் இளைஞர்கள் செஸ் போட்டிகளுக்கு வந்தார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இந்திய செஸ் விளையாட்டில் தவிர்க்கவே முடியாத இடம் எப்போதும் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு உண்டு.

இந்த விஸ்வநாதன் ஆனந்த் நமது நாட்டின் செஸ் ஹீரோ மட்டுமல்ல.. அவர் அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்பவே அதிகம். இதற்கிடையே நேற்று வெள்ளிக்கிழமை விஸ்வநாதன் ஆனந்த் தனது எக்ஸ் பக்ககத்தில் பதிவிட்ட ட்வீட் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடத்தல்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "விமான நிலையத்தில்.. என் கடத்தல்காரர்கள்.. ஒரு வழியாக என்னை விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவர் அலெக்ஸாண்ட்ரா போட்டேஸ் மற்றும் ஆண்ட்ரியா போட்டேஸ் டேக் செய்து இருந்தார். அவரது இந்த ட்வீட் முதலில் பலருக்கும் ஷாக் தந்தது. அவரது எக்ஸ் பதிவும் இணையத்தில் டிரெண்டானது. நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைக் கூறிய நிலையில், விஸ்வநாதன் ஆனந்த் உடனடியாக இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
என்ன மேட்டர்: அவர் டேக் செய்திருந்த அலெக்ஸாண்ட்ரா போட்டேஸ் மற்றும் ஆண்ட்ரியா போட்டேஸ் ஆகியோர் பிரபல சதுரங்க வீரர்கள் ஆவர். மேலும், அவர் தொடர்ச்சியாக தங்கள் சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். விஸ்வநாதன் ஆனந்த் ஒரு சதுரங்க நகர்வைக் குறிப்பிடும் வகையிலேயே அவர்களை டேக் செய்து முதலில் கடத்தல்காரர்கள் எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும் அவர், "என்னை விடுவிக்க ஒரு சிக்கலான சதுரங்க மூவை விடுவிக்க வேண்டும் என்று அலெக்ஸாண்ட்ரா போட்டேஸ் என்னிடம் கூறினார். செஸ் ஆட்டத்தில் ஒரு நிலையைக் காட்டி அங்கே பிளாக் ஆட்டக்காரர் எப்படி விளையாட வேண்டும் எனக் கேட்டார். Kd5க்கு நகர்த்த வேண்டும் எனச் சொன்னேன். சரியான பதிலைக் கொடுத்ததாலேயே அவர்கள் என்னை விடுவித்தார்கள்.
விடை என்ன: கூடுதல் விளக்கம் என்னவென்றால். இது ஒரு போட்டி என்பதால், கறுப்பு பிளேயர் Kd5க்கு காயை நகர்த்த வேண்டும். அப்போது தான் வெள்ளை ராஜா அணிவகுப்பை ராணி பக்கம் மெதுவாக்கும். மேலும் பணயக்கைதிக்கும் (அவரை சொல்லிக்கொள்கிறார்) விடுதலை கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்த்: தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் ஆவார். ஆனந்த் 1988ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து கிராண்ட்மாஸ்டர் ஆனார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவது அதுவே முதல்முறையாகும். FIDE ரேங்கில் இவர் டாப் இடத்தில் இருந்தார். இப்போதும் கூட பல இந்திய இளம் செஸ் வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தற்போது இந்திய செஸ் பொன்னான காலத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது நமது நாட்டில் இளம் வீரர்கள் பலர் 2700+ எலோ மார்க் பெற்றுள்ளது உண்மையாகவே பாராட்ட வேண்டிய ஒன்று. எல்லா காலங்களிலும் இதுபோல நடக்காது; இது உண்மையில் ஒரு சிறப்பான நிகழ்வு. செஸ்ஸில் அடுத்த தலைமுறை வலுவாக இருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளை உச்சத்தில் செலவிடப் போகிறார்கள் என்பதுதான்" என்று அவர் கூறியிருந்தார்
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications