சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 மாதம் தவிப்பு., ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்.. மகன் குறித்து நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் உலக செஸ் சாம்பியனும் உலகின் முன்னனி செஸ் வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் பெங்களூரில் ஏழு நாள் தனிமைப்படுத்தலை முடித்து சனிக்கிழமை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

Recommended Video

    Viswanathan Anand tells computers changed apporach to chess

    தமிழகத்தைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பிப்ரவரி மாதம் பன்டெஸ்லிகா செஸ் லீக்கில் விளையாட ஜெர்மனி சென்றிருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக நாடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டார். சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்ப முடியவில்லை.

    Chess maestro Viswanathan Anand finally reunited with his family in Chennai

    3 மாதங்களுக்கு பின் மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்தது. தற்போதும் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அப்படி அழைத்து வரப்படும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.

    கொரோனா இல்லை என்றாலும் கட்டாயமாக ஏழு நாள் குவாரண்டைனில் இருக்க வேண்டும். அதன்பிறகு 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். வீட்டு தனிமைப்படுத்துதலில் ஏழு நாள் இருந்த பின்னரே வெளியில் நடமாட முடியும்.

    தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. எங்கெல்லாம் கடும் பாதிப்பு.. முழு லிஸ்ட்தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. எங்கெல்லாம் கடும் பாதிப்பு.. முழு லிஸ்ட்

    இந்த சூழலில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஜெர்மனியில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய விஸ்வநாதன் ஆனந்த் பெங்களூரு வந்து இறங்கினார். பெங்களூருவில் 7 நாள் குவாரண்டைனில் இருந்த அவர், 7 நாள் தனிமைப்படுத்துதலை முடித்துக்கொண்டு சனிக்கிழமை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். மூன்று மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனியில் சிக்கியிருந்த அவர் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார். "ஆம், நான் வீட்டில் இருக்கிறேன். எனது குடும்பத்தை, குறிப்பாக என் மகனைப் பார்ப்பதில் மகிழ்ச்சி" என்று ஆனந்த் கூறியுள்ளார். தமிழக அரசின் நெறிமுறைகளின்படி ஏழு நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பார். "கடைசியில் வீட்டிற்கு வந்துவிட்டேன்," என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறியிருந்தார்

    English summary
    Chess maestro Viswanathan Anand finally reunited with his family in Chennai after being stuck in Germany for over three months
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X