மருத்துவக் காப்பீட்டு திட்டம்: ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை - செய்தியாளர்களுக்கும் காப்பீடு
அதிக சிகிச்சை முறைகளுடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையினால் 2020-21ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அடையாள அட்டை உள்ள 1,414 செய்தியாளர்களின் குடும்பங்கள் முதல்கட்டமாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக சிகிச்சை முறைகளுடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு மருத்துவமனைகள் மற்றும் 886 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1600 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். அத்துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், 5 ஆண்டுகளுக்கு மேலும் அதிக சிகிச்சை முறைகளுடன், பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய திட்ட பயனாளிகள் அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு எந்தவித உச்சவரம்பின்றி முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

ரூ.1,248.29 கோடி நிதி ஒதுக்கீடு
அதன் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, எம்.ஆர்.சி. நகரில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு அதற்கான ஆணையை வழங்கினார். அத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ.1,248.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு வசதி பெற முடியும்.

ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை
செய்தித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை ஆண்டு வருமான உச்சவரம்பின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைக்கவும், இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறையிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல்களைப் பெற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.

செய்தியாளர்களுக்கு காப்பீடு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையினால் 2020-21ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அடையாள அட்டை உள்ள 1,414 செய்தியாளர்களின் குடும்பங்கள் முதல்கட்டமாக இந்த அரசாணையின்படி இத்திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கீகரிக்கப்பட்ட 10 செய்தியாளர்கள், பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டைகளை வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு வசதி பெற முடியும்.
Recommended Video

எத்தனை மருத்துவமனைகள்
இத்திட்டத்தின் மூலம் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு மருத்துவமனைகள் மற்றும் 886 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1600 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். அத்துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications