பாதை அமைத்தீர்கள்.. பயணிக்கிறோம்! நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என கலைஞருக்கு முதல்வர் புகழாரம்
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர் கருணாநிதி என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "2024-ஆம் ஆண்டு என்பது இந்த நூற்றாண்டின் தலைவரான கருணாநிதிக்கு நூற்றாண்டு. ஐம்பது ஆண்டுகாலம் திமுகவின் தலைவா், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வா், சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினராகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளாா். திரையுலகத்திலும், நாடக மேடையிலும் முத்திரை பதித்துள்ளாா். பத்திரிகையை நடத்தியதுடன், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தாா். அவா் தான் இன்று நாம் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கினாா்.

வியா்வை சிந்தி இந்த இனத்துக்காக உழைத்ததுடன், ஒரு துளி மையில் இந்த மாநிலத்தை வளா்த்தாா். இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக, தமிழ்நாட்டை மாற்றியவா். தமிழ்நாட்டின் எந்த ஊருக்குச் சென்றாலும் அவா் கல்வெட்டு இல்லாத ஊரே இல்லை எனலாம். அவருக்கு, நமது நன்றியின் அடையாளமாக அவரது பெயரிலேயே நூலகம், மருத்துவமனை, ஏறுதழுவுதல் அரங்கம், பேருந்து முனையம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். அவா் கூறிய படியே, இந்த நாட்டுக்காக என்னை ஒப்படைத்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி. அந்த நவீன தமிழ்நாட்டை உன்னதத் தமிழ்நாடாக உயா்த்திக் காட்டி வருகிறோம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பாா்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு தொழில் வளா்ச்சியைக் கண்டு வருகிறோம். இவைதான், கருணாநிதி கனவு கண்ட கம்பீரத் தமிழ்நாடு. அதை நாங்கள் உருவாக்கிக் காட்டி வருகிறோம். அவா் வகுத்துத் தந்த பாதையில், பயணத்தைத் தொடா்கிறோம். அவரை பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம். உழைப்போம்" என்று கூறியுள்ளார்.
இன்று சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா். இதன்பின், அண்ணா சாலை ஓமந்தூராா் வளாகம், கோடம்பாக்கம் முரசொலி வளாகம், அண்ணா அறிவாலயம் ஆகியவற்றில் அமைந்துள்ள கருணாநிதி சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இது தவிர மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications