ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல.. இனி வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி.. மு.க.ஸ்டாலின் பதில்!
"உங்களில் ஒருவன் பதில்கள்" மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மட்டுமல்லாமல் இனி வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் முதலமைச்சருக்கு விடுமுறை கிடையாது என்று கூறிய முக ஸ்டாலின், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் குறித்து விரிவாக விளக்கியுள்ளார். அதேபோல் ஆளுநர் உடனான மோதல் குறித்தும் பதில் அளித்துள்ளார்.
அரசியல், நிர்வாகம், கொள்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பின் கீழ் பதிலளித்துள்ளார்.
கடந்த முறை அக்டோபர் மாதத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் சமூக வலைதளங்களில் கட்சி, கொள்கை, பாஜகவுடனான உறவு உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
இந்த நிலையில் மீண்டும் உங்களில் ஒருவன் பதில்கள் மூலமாக ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அதில், வணக்கம் ஆரம்பிக்கலாமா என்ற கேட்டவுடன், சமீபத்தில் உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி எது? என்ற கேள்விக்கு, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகி இருப்பது தான் அண்மையில் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

திமுகவின் குரல்
இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் ஆக வேண்டும் என்று திமுக சார்பாக தொடக்க காலம் முதலே குரல் கொடுத்து வருகிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று சொல்றவங்க நாங்க. உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்றவங்க நாங்க. இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியாகி வருவதை முதல் படியாகவே பார்க்கிறேன். மற்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து நடக்குமென நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு vs கொலிஜியம்
தொடர்ந்து, நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் அமைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய சட்ட அமைச்சருக்கும் நடக்கும் மோதல் பற்றிய கேள்விக்கு, அது ஆரோக்கியமானது அல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண்களில் முக்கிய ஒன்றாக இருக்கும் நீதித்துறையில், அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவமும் இடம்பெற வேண்டும் என்பதே நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. திமுகவும் அதையே விரும்புகிறது.

முறையல்ல
அதுக்காக நீதித்துறை சுதந்திரத்தில் குறுக்கிடும் வகையில் மத்திய அரசு பிரதிநிதி ஒருவரை கொலீஜியத்தில் உறுப்பினராக நியமிப்பது முறையல்ல. நீதிபதிகளின் நியமனத்தில் மாநில அரசின் கருத்துகளை கூட மதிக்காத இன்றைய சூழலில், மத்திய அரசின் பிரதிநிதி ஒருவர் இடம்பெறுவது உயர்நீதிமன்றத்தில் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திலும் சமூகநீதி அடிப்படையிலான நீதிபதிகள் தேர்வு முறைக்கு துளியும் உதவாது என்று தெரிவித்துள்ளார்.

விடுமுறை கிடையாது
தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை கூட ஆய்வுப் பணியை மேற்கொள்கிறீர்களே என்ற கேள்விக்கு, முதலமைச்சருக்கு சாட்டர்டே, சண்டே எல்லாம் கிடையாது. இந்த ஆண்டு கனமழை பெய்த போது, சென்னையில் மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் நிம்மதியாக இருந்தார்கள் என்றால், அதற்கு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம். அதில் இன்னும் சில பணிகள் மீதமிருக்கிறது என்று சொல்லி இருந்தேன். அந்த மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன்.

சாலைகள் சீரமைக்கும் பணி
மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதனை பார்த்தேன். கிண்டியில் கட்டப்பட்டு வரும் உயர்தர பல்நோக்கு மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்தேன். முதலமைச்சர் என்ற வகையில் நானே நேரடியாக ஆய்வு செய்யும் போது அதிகாரிகள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெறுவார்கள். அதன் மூலமாக திட்டங்களை வேகமாக நிறைவேற்றி முடிக்கலாம். அதனால் தான் கள ஆய்வுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை மேயராக ஸ்டாலின்
தொடர்ந்து, இப்போது கள ஆய்வில் முதலமைச்சர் என்று ஒரு திட்டத்தை அறிவித்துள்ளீர்கள். இதன் செயல்முறை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, களப்பணி என்பது எனக்கு புதிதல்ல. களத்தில் இருந்து வந்தவன் நான். களப்பணியாற்றியே முன்னுக்கு வந்தவன் நான். சென்னை மேயராக இருந்த போது மாநகர மேம்பாட்டுக்காக பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தினோம். குறிப்பாக சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 9 மேம்பாலங்களை கட்டினோம்.

நிதி மிச்சம்
அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவிகிதத்தை மிச்சப்படுத்தினோம். குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக திட்டத்தை நிறைவேற்றினோம். தலைமைச் செயலகத்தில் அமர்ந்து திட்டங்களை உருவாக்குகிறோம். சட்டமன்றத்தில் அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டங்கள் எல்லாம், எவ்வளவு விரைவாக செயல்படுத்தப்படுகிறது என்று கோட்டையில் எனது அறையில் டாஸ்போர்டில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

முதல்வர் முதல் கடைநிலை அரசு ஊழியர் வரை
அதோடு, திட்டங்களின் செயல்பாட்டை நேரில் பார்த்து முடுக்கிவிட அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவிருக்கிறேன். முதலாவதாக பிப்.1ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் அரசு திட்டங்களை ஆய்வு செய்யப் போகிறேன். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இந்த ஆய்வின் முக்கிய அம்சங்களாக இருக்கும். கள ஆய்வில் கிடைத்த தகவல் மூலம் திட்ட செயல்பாடுகளை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். முதலமைச்சர் தொடங்கி கடைநிலை அரசு ஊழியர் வரை ஒரே நோக்குடன் செயல்பட்டால் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக மாறும். அதற்கான செயல்திட்டம் தான் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் களம் பற்றி மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தின் நிலவரம் எப்படி இருக்கு என்ற கேள்விக்கு, இந்த இடைத்தேர்தலே ஒரு துயரமான சூழலில் வந்திருக்கிறது. திருமகன் ஈவெராவின் மறைவு எதிர்பாராதது. ஈரோட்டில் நேரடியாக அஞ்சலி செலுத்த சென்றபோது, இளங்கோவனின் நிலையை பார்த்து கலங்கிவிட்டேன்.

திமுகவுக்கு வெற்றி
அரசியலில் தந்தை மறைவுக்கு பின், மகனுக்கு வாய்ப்பு வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் திருமகன் ஈவெரா மறைந்து அவர் தந்தை போட்டியிட வேண்டிய சூழல் வந்திருக்கிறது. கனத்த இதயத்துடனே ஈவிகேஎஸ் இளங்கோவன் களத்தில் இருக்கிறார். இது தேர்தல் களம். இந்த இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி வெற்றிபெறும். திமுக சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், கூட்டணியின் ஒத்துழைப்பும் வெற்றியை பெற்றுத் தரும். இந்த இடைத்தேர்தல் மட்டுமல்லாமல், இனிவரும் எல்லா தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பது உறுதி.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி?












Click it and Unblock the Notifications