சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் டெல்டாவில் அதிரடி ஆய்வு.. தூர் வாரும் பணியை பார்வையிடுகிறார் முதல்வர்.. இன்றும் நாளையும்.!

டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் வழித்தடங்கள் துார்வாரும் பணியை, முதல்வர் ஸ்டாலின் இன்று முதல் இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளார்... இதற்காக காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் செல்கிறார்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி பருவம் துவங்கி உள்ளது. இதற்காக, கடந்த 24-ம்தேதி, குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது..

கல்யாணம் ஆகி 4 மாசமாச்சு! அவரு ’சரியில்லை’..! காவல்நிலையத்தில் கதறிய இளம்பெண்! இந்த பிரச்சினை வேறயா?கல்யாணம் ஆகி 4 மாசமாச்சு! அவரு ’சரியில்லை’..! காவல்நிலையத்தில் கதறிய இளம்பெண்! இந்த பிரச்சினை வேறயா?

இதனால், சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்... இதில், கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்வதற்காக, 80 கோடி ரூபாயில் தூர்வாரும் பணிகளும் நடந்து வருகின்றன..

கடைமடை

கடைமடை

இதுவரை 4,000 கி.மீ., தூர்வாரப்பட்டு உள்ளது... மேலும், 900 கி.மீ.,க்கு மேல் தூர்வார வேண்டிஉள்ளது... அதனால், குறித்த காலத்திற்குள் தண்ணீர் சென்று சேர வேண்டி உள்ளது.. அதேபோல, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் நிறைவுடையும் நிலையிலும் உள்ளன.

ஆய்வு

ஆய்வு

இப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை, இன்று முதல் இரண்டு நாட்கள் நேரில் ஆய்வு செய்ய, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். இதற்காக, இன்று பகல் 12:30 மணிக்கு, விமானத்தில் முதல்வர் திருச்சி செல்கிறார். அங்கு ஆய்வு செய்த பிறகு, கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு செல்கிறார்.. வேளாங்கண்ணியில் இரவு ஸ்டாலின் தங்குகிறார்.. நாளை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், நாகை மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.

 ஸ்டாலின் ஆய்வு

ஸ்டாலின் ஆய்வு

பிறகு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்... தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்... அங்கிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு தஞ்சை மாவட்டத்துக்கு செல்லும் அவர், அம்மாப்பேட்டை அருகே கொக்கேரி கிராமத்தில் பிமனோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொள்கிறார்.

 ஸ்டாலின் பேட்டி

ஸ்டாலின் பேட்டி

பின்னர், திருச்சி ஏர்போர்ட்டுக்கு சென்றடையும் ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்... முதல்வரின் வருகையையொட்டி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, விவசாயிகளின் நலன் கருதி அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதும், கடந்த வருடம் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தைவிட கூடுதலான அளவில் குறுவை சாகுபடி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

English summary
chief minister MK stalin inspection of delta districts for two days from today டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X