காவி ட்ரெஸ்.. ஜிம்மில் கடும் ஒர்க்அவுட்.. பின்னணியில் ‘பாராட்டு செய்தி’- அசத்தும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் புதிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளன.
Recommended Video
தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஸியான அரசுப் பணிகள், அதிகாரிகள் உடனான ஆலோசனை, தீவிரமான கட்சிப் பணிகளுக்கு மத்தியிலும் தனது உடல் நலனில் அக்கறை செலுத்துவது அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படும் விஷயம்.
அந்த வகையில், இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் காவி நிற டிரவுசர் - பனியன் அணிந்துள்ளார்.

உடல் நலனில் அக்கறை
தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போதுமே தனது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்தக்கூடியவர். உணவுப் பழக்கத்தில் மட்டுமல்லாது, உடற்பயிற்சி செய்வதிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிக ஆர்வம் உண்டு. தினமும் நடைப்பயிற்சி, சைக்கிளிங், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர். தான் மட்டுமல்லாது, அனைவரையுமே உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என வலியுறுத்துபவர்.

சைக்கிளிங்
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அதிகாலை நேரங்களில் நடைபயிற்சி செய்யும் முதல்வர் ஸ்டாலினின் வழக்கம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செல்வதையும் அவ்வப்போது பார்க்கலாம். கூலர்ஸ், ஹெல்மெட் என கலக்கலாக முதல்வர் ஸ்டாலின் சைக்கிளிங் செல்லும் வீடியோக்கள் பல ஏற்கனவே வெளிவந்துள்ளன.

வீட்டிலேயே ஜிம்
முதல்வர் ஸ்டாலின், தனது வீட்டிலேயே உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை அமைத்துள்ளார். நவீன உபகரணங்களுடன் அமைந்துள்ள அந்த ஜிம்மில் அமைக்கப்பட்டுள்ள பெரிய தொலைக்காட்சித் திரையில் செய்திகளைப் பார்த்தவாறே வொர்க் அவுட் செய்வது முதல்வர் ஸ்டாலினின் வழக்கம். தமிழக முதல்வரான பிறகு பணிச்சுமை கடுமையாக அதிகரித்த போதிலும், வொர்க் அவுட் செய்வதை தொடர்ந்து பின்பற்றி வருகிறார் ஸ்டாலின்.

வொர்க் அவுட் வீடியோ
அவ்வப்போது, முதல்வர் ஸ்டாலினின் ஜிம் வொர்க் அவுட் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவுவது வழக்கம். இந்நிலையில், தனது வீட்டில் உள்ள ஜிம்மில் முதல்வர் ஸ்டாலின் இன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது. சமீபத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த முதல்வர் ஸ்டாலின், மீண்டும் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யத் தொடங்கியுள்ளார்.

செய்திகளைக் கேட்டபடி
இன்று வெளியாகியிருக்கும் வீடியோவில், முதல்வர் ஸ்டாலின் காவி நிற டிரவுசர், பனியன் அணிந்துகொண்டு வொர்க் அவுட் செய்கிறார். ட்ரெய்னர் ஒன்று, இரண்டு என எண்ண எண்ண ஸ்டாலின் வொர்க் அவுட் செய்கிறார். பின்னணியில், செஸ் ஒலிம்பியாட் பற்றிய செய்தித் தொகுப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்தச் செய்தித் தொகுப்பில் செஸ் ஒலிம்பியாட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்து நடத்தும் முதல்வரை வீரர்கள், பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications