முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாரான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த மாதம் தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர், மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். 92 வயதாகும் இவருக்கு, வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இம்மாத தொடக்கத்தில் திடீரென மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து மார்ச் 9ஆம் தேதி உடல்நலம் பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல்நலம் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications