சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 மாஸ்க்குகளை அணிந்து கொள்ளுங்கள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்.. விழிப்புணர்வு வீடியோ..!

2 மாஸ்க்குகளை அணிந்து கொள்ளுங்கள் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "முகக்கவசம் அணியுங்கள்.. கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்.. தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.. நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்" என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அத்துடன் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் 2 முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    டபுள் மாஸ்க் போடுங்க... தடுப்பூசி கட்டாயம்... வீடியோ மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு!

    தற்போது கொரோனாவைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது...

    இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கொரோனாவைரஸ் தடுப்பு குறித்து, ஒரு விழிப்புணர்வு வீடியோவை, தானே பேசி வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் "நான் நிற்கிற இடத்தில் யாரும் இல்லாததால், என்னுடைய முககவசத்தை எடுத்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன்" என்று சொல்லி, முதல்வர் தன் பேச்சை தொடங்குகிறார்.

     பாதுகாப்பு

    பாதுகாப்பு

    "வணக்கம், இது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால், அனைவரும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்கணும்-. முடிஞ்ச அளவுக்கு வீட்டுக்குள்ளேயே இருங்க.. தவிர்க்க முடியாத காரணத்துக்காக வெளியே போனாலும், தனிமனித இடைவெளியை மறக்காமல் கடைப்பிடிங்க.. இந்த தொற்றில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள மிக மிக முக்கியமானது, இந்த முககவசம்தான்..

     முக கவசம்

    முக கவசம்

    முககவசம்தான் மனிதர்களுக்கு இன்று உயிர்க்கவசமாக மாறி உள்ளது.. இந்த முககவசத்தை அனைவரும் போட்டுக்குங்க.. அது ரொம்ப முக்கியம்.. இந்த முக கவசத்தை முழுமையாக போடணும்.. மூக்கு,வாய், முழுமையாக மூடியிருக்கிற மாதிரி போடணும்.. சிலர் இதை பாதி அளவுதான் போடறாங்க.. மூக்குக்கு கீழே முக கவசம் போடுவதால், எந்த பலனும் இல்லை.. சிலர் ஹெல்மட் வாங்கி பைக்கில் மாட்டியிருப்பாங்க.. தலையில் மாட்ட மாட்டாங்க.. அதுபோல மாஸ்க்கை தாடைக்கு போடணும்.. முழுமையாக மூக்கு, வாயை மூடணும்..

     2 மாஸ்க்

    2 மாஸ்க்

    அதேபோல, மருத்துவர்கள் இப்போது இன்னொரு விஷயத்தை சொல்றாங்க.,. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 2 முக கவசங்களை சேர்த்து பயன்படுத்தலாம்னு சொல்றாங்க.. மருத்துவமனைக்கு போகும்போது, பேருந்துகளில் பயணிக்கும்போதும், கடைகளுக்கு செல்லும்போதும், தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றும்போதும், 2 மாஸ்க் அணியலாம்னு சொல்றாங்க.. கிருமிநாசினிகளால் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்க..

    தடுப்பூசி

    தடுப்பூசி

    நல்லா முழுமையா விரல் இடுக்குகளில் விட்டு முழுமையா துடைக்கணும்.. இது எல்லாத்துக்கும் மேலாக, மிக மிக முக்கியமானது தடுப்பூசி.. இதுவரை தடுப்பூசி போடாதவங்க உடனடியாக தடுப்பூசி போட்டுக்குங்க.. நோய்த்தொற்றில் இருந்து உங்களை காக்கவும், மீட்கவும் இருக்கிற முக்கிய கவசம் தடுப்பூசிதான்.. நான் தடுப்பூசி போட்டுக்கிட்டேன்.. 2 டோஸ்களையும் போட்டுக்கிட்டேன்.. சிலருக்கு காய்ச்சல், உடல்வலி வரலாம்.. ஆனால், ஒரே நாளில் சரியாயிடும். அதனால எந்த தயக்கமும் வேண்டாம்.. தடுப்பூசி போடுவதை தமிழக அரசு ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது.

    தமிழகம்

    மாஸ்க் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்து, தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாத்திக்கலாம்.. கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போம்.. நன்றி வணக்கம்" என்கிறார்.

    English summary
    Chief Minister MK Stalin request, put on masks
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X