• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முன்னோட்டம் தான்.. இதிலேயே சொல்லிவிட முடியுமா? சட்டசபையில் முதல்வர் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலின் போது திமுக அறிவித்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பெண்களுக்குமாதம் ஆயிரம் உரிமை தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம் பெறாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், 5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதை ஆளுநர் உரையில் சொல்லி விட முடியாது என்றும் ஆளுநர் உரை முன்னோட்டம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது திமுக பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தது. பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, முதியோர் உதவித்தொகை உயர்வு, கல்வி கடன் ரத்து, ஐந்து சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி உள்பட கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது.

இதேபோல் ஆட்சிக்கு வந்த உடன் 4000 ரூபாய் மக்களுக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றி உள்ளார் ஸ்டாலின். இதேபோல் மகளிருக்கு சாதாரண நகர பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டமும் உடனே நடைமுறைக்கு வந்தது.

கல்வி கடன் ரத்து

கல்வி கடன் ரத்து

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்த உடன் முதல் நாளிலேயே இதற்கான கையெழுத்து போட்டார். ஆனால் மிக முக்கியமான திட்டங்களாக பார்க்கப்படும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, முதியோர் உதவித்தொகை உயர்வு, கல்வி கடன் ரத்து, ஐந்து சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி உள்பட அறிவிப்புகள் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

பிடிஆர் பதில்

பிடிஆர் பதில்

அதேநேரம் நிதி நெருக்கடி நிலை நாங்கள் நினைத்ததைவிட மோசமாக உள்ளதால் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று வெளிப்படையாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துவிட்டார். இது விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதற்கு பதில் அளித்த பிடிஆர், குறைப்போம் என்று சொன்னோம் தேதி சொன்னோமோ என்று எதிர் கேள்வி கேட்டு செய்தியாளர் சந்திப்பில் வாயடைக்க வைத்தார்,

மா சுப்பிரமணியம் பதில்

மா சுப்பிரமணியம் பதில்

இதேபோல் நீட் தேர்வு இந்த நிமிடம் வரை உண்டு. மாணவர்கள் அதற்கு தயாராக வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதுவும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் ஆளுநர் உரையில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் பல இடம்பெறவில்லை. இதற்கு எடப்பாடி பழனிசாமி, எல் முருகன், ராமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த விமர்சனங்களுக்கு இன்று சட்டசபையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது, "கடந்த இரண்டு நாட்களாக திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார்கள். அந்தப் பிரச்சினைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குறித்து வைத்துள்ளனர். துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சி குறித்து ஆளுநர் உரையில் மட்டும் முழுமையாகச் சொல்ல முடியாது. ஆளுநர் உரை என்பது அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கை விளக்கச் சுருக்கம். அதில், அரசின் 5 ஆண்டுகளுக்கான நோக்கம், திட்டம், செயல்பாடுகள், அணுகுமுறைகளை விளக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம்தான். புரியக்கூடிய வகையில் சொல்லப்போனால், இது ஒரு ட்ரெய்லர்தான். முழுத் திரைப்படத்தை வெள்ளித்திரையில் காணலாம் என்பதுபோல, அரசின் பாதை, இடர்ப்பாடுகள், அவற்றைக் களைந்தெறியும் சூட்சுமம் ஆகியவை விரையில் இந்த அவையில் வைக்கப்படவுள்ள பட்ஜெட்டில் இடம்பெறும்" இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
Chief Minister mk Stalin has said that the governor's speech is not a show of what will happen in the next five years, and that the governor's speech is a preview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X