லேசான காய்ச்சல்..ஒய்வெடுக்க அறிவுறுத்திய மருத்துவர்கள்! முதல்வர் ஸ்டாலின் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து
சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அவரது இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ராணிப்பேட்டை திருப்பத்தூர் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்தார்.
இன எழுத்து தொடர் பணிகள் காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் அவர், ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் காய்ச்சல் காரணமாக ஓய்வு எடுத்து வருவதால் அவரது இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்," முதல்வர் நாளை (20ம் தேதி ) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறு நாள் (21ம் தேதி ) வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ள நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

லேசான காய்ச்சல்
இந்த சூழலில் முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே அந்நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகிறது. இவற்றிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் வேறொரு நாளில் நடைபெறும் என கூறப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகன்
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். மகுடம் மறுத்த மாமன்னன் என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார் தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிலை.

நிகழ்ச்சியில் ரத்து
அவருக்கு பதிலாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனை அந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். மருத்துவர்கள் அறிவுரைப்படி முதல்வர் ஸ்டாலின் இன்று வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். இந்நிலையில் தான் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications