நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் – ட்விட்டரில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
சென்னை : இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் மூலம் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Recommended Video
அபூர்வ ராகங்கள் தொடங்கி தற்போது வெளிவந்த அண்ணாத்த வரை தமிழ் திரையுலகின் தன்னிகரில்ல தலைவராக , சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக இருந்து இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கலக்கி கொண்டிருக்கும் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி பிரபலங்கள், இயக்குனர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள் தமிழகமெங்கும் பிரம்மாண்ட போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் வைத்து கலக்கி வருகின்றனர்.

யானை இல்லை குதிரை
கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரைக்கும் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கும் அவர் 1975ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.அப்போது பார்த்த அதே ஸ்டைல் தற்போது வந்துள்ள அண்ணாத்த படம் வரை தொடர்ந்து வருகிறது. நான் யானை அல்ல குதிரை சும்மா டக்குனு எழுந்திருப்பேன் என்று கூறிய ரஜினி சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் ஓடிக் கொண்டிருக்கிறார்.

ட்ரெண்டாகும் #HBDSuperstarRajinikanth
மோகன் வந்து விட்டார் , விஜயகாந்த் வந்துவிட்டார், சத்யராஜ் வந்துவிட்டார் என பல நடிகர்கள் வந்தபோதும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் அவருக்கு இன்று பிறந்தநாள் இதையொட்டி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகிவருகிறது. இதனை பயன்படுத்தி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் அவருக்கு இயக்குனர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 72 ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களை தன்னிகரற்ற தனது ஆளுமையால் மகிழ்விக்கும் நல்ல உடல்நலத்துடன் திகழு விழைகிறேன்என்று கூறியுள்ளார்.

களைகட்டும் கொண்டாட்டம்
அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் எங்கும் ரசிகர்களால்களைகட்டி வருகிறது. பல்வேறு இடங்களில் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர் மேலும் ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலமாக 100 ஏழை மாணவ மாணவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?











Click it and Unblock the Notifications