மதுரை வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. சிவகங்கை, புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மதுரைக்கு வருகிறார். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பார்வையிடுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மதுரை வருகிறார். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பார்வையிடுகிறார். பின்னர் இரவு முதலமைச்சர் மதுரையில் தங்கும் நிலையில் நாளை மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக சிவகங்கை செல்கிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக மாவட்டங்களுக்கு செல்கிறார்.

Chief Minister Stalin Visit Madurai Provides welfare assistance in Sivagangai, Pudukottai

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் 100 வீடுகளை கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வருகிறார். புதுக்கோட்டையிலும் நாளை மாலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருச்சி செல்லும் முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+