உடலுக்கு வலு சேர்க்கும் மருத்துவப் பண்பு முருங்கைக்கு உண்டு! கண்காட்சி வெற்றிபெற முதல்வர் வாழ்த்து!
சென்னை: உணவில் சுவையைக் கூட்டுவதில் மட்டுமல்ல, உடலுக்கு வலு சேர்க்கக் கூடிய மருத்துவப் பண்பும் முருங்கைக்கு உண்டு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெறும் சர்வதேச முருங்கைக் கண்காட்சி வெற்றிபெற வாழ்த்துக் கூறியுள்ள அவர் அதில் இதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியின் விவரம் வருமாறு;

காவிரி-அமராவதி
காவிரியும் அமராவதியும் கரைபுரண்டோடும் கரூர் மாவட்டத்தின் மண்வளமும் பருவநிலையும் முருங்கைச் சாகுபடிக்குப் பொருத்தமானதாக இருப்பதால், கரூர் மாவட்டம் முருங்கைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. அதனைக் கருத்தில் கொண்டே கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர் மற்றும் மதுரையை "முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலம்" எனக் கழக அரசு சென்ற ஆண்டு அறிவித்தது.

மருத்துவப் பண்பு
உணவில் சுவையைக் கூட்டுவதில் மட்டுமல்ல, உடலுக்கு வலு சேர்க்கக் கூடிய மருத்துவப் பண்பும் முருங்கைக்கு உண்டு, காய், இலை, விதை, பட்டையென முருங்கையின் அனைத்திலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இந்நிலையில், கரூரில், நவம்பர் 4,5 மற்றும் 6 ஆகிய நாட்களில் நடைபெறும் பன்னாட்டு முருங்கைக் கண்காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

முருங்கை உற்பத்தி
உலகெங்கும் பயன்படும் இந்த உன்னத முருங்கையின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், பல்வேறு பயன்கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை வேளாண் பெருமக்கள் அறிய இந்தக் கண்காட்சி மிகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த முருங்கைக் கண்காட்சி வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

முதல்வர் வாழ்த்து
முருங்கை உழவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, பன்னாட்டு முருங்கைக் கண்காட்சிக்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருக்கும் இந்தியத் தொழில் கூட்டமைப்பிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், வேளாண் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications