முதல்வர் ஸ்டாலினின் பயணம் திடீர் ரத்து.. அமைச்சர் இல்ல விழாவிற்கு செல்லவில்லை!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டு இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன் புதுப்பட்டியில் நடைபெறும் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் திருச்சி செல்ல இருந்தார்.

தமிழக சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.ரகுபதியின் பேரன் டாக்டர் எஸ்.நாச்சியப்பன் ரகுபதி - டாக்டர் பி.அழகம்மை திருமணம் புதுக்கோட்டையை அடுத்த புதுப்பட்டியில் இன்று காலை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று மாலை 6 மணி அளவில் புதுக்கோட்டை ஜெ.ஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருந்தார்.
பரபர சூழலுக்கு மத்தியில் புதுக்கோட்டை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்! திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை
இதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து 5 மணிக்கு தனி விமானத்தில் திருச்சிக்கு கிளம்ப இருந்தார்.
திருச்சியில் இருந்து 6 மணிக்கு காரில் புறப்பட்டு 6.45 மணிக்கு புதுக்கோட்டை சென்று, ரகுபதி இல்ல திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, பின்பு இன்று இரவு 1.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வந்து மீண்டும் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார்.
இந்தச் சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications