வானில் தென்பட்ட பிறை.. தமிழகத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி மிலாடி நபி - தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: இஸ்லாமிய மக்களின் புனிதப் பண்டிகையான மிலாடி நபி எப்போது கொண்டாடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று வானில் பிறை தென்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களின் புனிதப் பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி. இறை தூதர் முகமது நபியின் பிறந்த நாளை இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். மிலாதுன் நபி அன்று இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கடைபிடித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான மிலாதுன் நபி, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

நேற்று வானில் பிறை தென்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் செப்டம்பர் 5 ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications