"புயல்ங்க".. சுத்திட்டு வருது டபுள் சக்கரங்கள்.. பின்னியெடுக்க போகும் மழை.. அலர்ட்டா இருங்க மக்களே
இன்று முதல் அடுத்தடுத்து 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரிக்கு நல்ல மழை இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது..
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மாத துவக்கத்திலேயே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பிறகு மெல்ல மெல்ல வலுவிழந்தது.

யுத்த வானம்
எனினும், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது.. இதற்கு பிறகு, சென்னை வானிலை மையத்தின் அறிவிப்புகள்படி, தமிழகத்தில் மழைப்பொழிவு தினமும் இருந்து கொண்டே வந்தன.. குறிப்பாக, டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்றும் சமீபத்திய வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுத்துது சக்கரம்
மற்றொருபக்கம் வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டிருந்த அறிவிப்பில், டிசம்பர் 2வது வாரத்தில் இந்தோ- சீனா கடல் பகுதியில் சக்கரம் உருவாகலாம். சக்கரங்கள் என்பவை பெரும்பாலும் குறைந்த அட்சரேகையில் நகரும் என்றும் கூறியிருந்தது, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.. இன்னொருபக்கம், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் 2 புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது... இப்போது புது தகவல் வெளியாகி உள்ளது..

நியூ அறிவிப்பு
அரபிக் கடலிலும், வங்கக்கடலில் கிழக்கு மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியிலும் இந்த சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் அடிப்படையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊடுருவும்
படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 8, 9ம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 2,3ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10 மணி + 8 மாவட்டம்
தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... காரைக்காலிலும் காலை 10 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பல இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications